Tuesday, 29 November 2016

'கலைவாணர்' N.S.கிருஷ்ணன் பிறந்த தினம் இன்று-NOV-29.

நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர் . . . 


29-11-16 மதுரை மாவட்ட பணி நிறைவு பாராட்டு விழா...


Monday, 28 November 2016

நவ -28, தோழர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் பிறந்த நாள.. .

Image result for Friedrich engelsகம்யூனிச சித்தாந்த ஆசான்களில் ஒருவரான பிரடரிக் எங்கெல்ஸ் இன்றுதான் பிறந்தார். நவம்பர் 28, 1820
அவர் கம்யூனிச தத்து வத்தை உருவாக்கிய கார்ல் மார்க்சின் உயிர்த்தோழர். ஒரு நெசவாலை முதலாளியின் மகனாக ஜெர்மனியில் பிறந்தவர்.அதிகம் படிக்க ஆசை இருந்தும் 17 வயதில் அப்பாவின் தொழிலை பார்க்கச்சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டார்.ஆனாலும் சுயமாக கல்வி பயின்று மேதையானார். மார்க்ஸ் இவரைஇன்னொரு நான்என அழைத்தார்.
மூலதனம் எனும் நூல் தொகுதியில் முதல் புத்தகத்தை வெளியிட்டு விட்டு மார்க்ஸ் மறைந்து விட்டார். மார்க்ஸ் மறைவுக்கு பிறகு அவரது குறிப்பு நோட்டுகளில் இருந்து மற்ற மூன்று புத்தகங்களையும் எங்கல்ஸ்தான் தொகுத்து வெளியிட்டார்.அவர் இல்லாவிட்டால் நமக்கு இப்போது இருக்கிற மாதிரி முழுமையான வடிவில் கம்யூனிச தத்துவம் கிடைத்து இருக்காது

26-11-16 சிஐடியு மாநாடு பேரெழுச்சியுடன் துவங்கியது...

15 ஆவது CITU அனைத்திந்திய மாநாடு ஒரிசா மாநிலத்தில் உள்ள பூரியில் இன்று உற்சாகமாக துவங்கியது .5 நாட்கள் நடைபெற உள்ள இந்த மகாநாட்டை CITU சங்கத்தின் அனைத்திந்திய தலைவர் தோழர் A .K பத்மநாபன் கொடியேற்றி துவக்கி வைத்து தலைமையுரை ஆற்றினார் .நமது பொது செயலர் தோழர் அபிமன்யு அவர்கள் இம் மாநாட்டில் பிரதிநிதியாக கலந்து கொண்டுள்ளார்.

மாநாடு எல்லா வகையிலும் வெற்றி பெற BSNLEU மதுரை மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது..

FIDEL CASTRO வாழ்க்கை வரலாறு தமிழ்ல் part 2 ...

தோழர் பிடல் காஸ்ட்ரோ அவர்களின் வரலாறு  காண இங்கே கிளிக் செய்யவும்.

Saturday, 26 November 2016

26-11-16,மக்கள் தலைவர் காஸ்ட்ரோ-மறைந்தார்...



ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தியும், விடுதலைப் பெற்ற நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றும் பகைவர்களின் இடைவிடாத அழிப்பு வேலைகளிலிருந்து காத்தும் 33 ஆண்டு காலமாக ஈடுஇணையில்லாத தொண்டாற்றிய பெருமைக்குரியவர் பிடல் காஸ்ட்ரோ. சின்னஞ்சிறிய கியூபா நாட்டினை சர்வதிகார ஆட்சியிலிருந்து மீட்பதற்காக போராடிய பிடல் காஸ்ட்ரோவும் அவரது அற்புதமான தோழன் சேகுவேராவும் உலக வரலாற்றில் உன்னதமான இடத்தை பெற்றுள்ளனர். காஸ்ட்ரோவின் ஆட்சியை கவிழ்க்கவும், அவரைப் படுகொலை செய்யவும் அமெரிக்க வல்லரசு இடைவிடாது முயற்சி செய்தது. உலக வல்லரசான அமெரிக்காவின் நயவஞ்சகத்தை பிடல் காஸ்ட்ரோ வெற்றிகரமாக முறியடித்தார். இதன் விளைவாக நடுநிலை நாடுகளின் நாயகராகப் போற்றப்பட்டார். கியூபாவின் அதிபராக ஆனபின்னும் எளிமையான மக்கள் தொண்டராகத்தான் அவர் திகழ்ந்தார். இவருடைய வழிகாட்டலில் இலத்தீன் அமெரிக்க நாட்டு மக்கள் விழிப்புணர்வைப் பெற்றனர். அதன் விளைவாக இந்நாடுகளில் இருந்த பிற்போக்கு ஆட்சிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடி ஜனநாயக அரசுகளை அமைத்துக்கொண்டனர். கியூபா நாட்டின் அதிபர் பதவியில் சுமார் 50 ஆண்டு காலம் இருந்த பிறகு தாமாகவே முன்வந்து பதவியைத் துறந்ததின் மூலம் அவருடைய புகழ் மேலும் பலமடங்கு உயர்ந்துள்ளது. தென்ஆப்பிரிக்க நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திய நெல்சன் மண்டேலா அந்த நாட்டின் முதல் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார். ஆனாலும் மறுமுறை அந்தப் பதவியை வகிக்க விரும்பவில்லை. தாமாகவே முன்வந்து பதவியைத் துறந்த அவரை இன்னமும் தென்னாப்பிரிக்க மக்கள் தங்களின் பாசத்திற்குரிய தேசத் தந்தையாகப் போற்றுகிறார்கள். பிடல் காஸ்ட்ரோவின் இந்தப் பதவி துறப்பு உலக நாடுகளில் உள்ள பல்வேறு நாட்டுத் தலைவர்களுக்கும் முன்மாதிரியாக விளங்கும் என நம்புகிறோம். எத்தனை வயதானாலும் பதவியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விடமறுக்கும் இன்றைய தலைவர்கள் பலருக்கு நடுவில் பிடல் காஸ்ட்ரோ இமயம் போல் உயர்ந்து நிற்கிறார். அன்புத் தலைவனுக்கு செவ்வணக்கம் 

200 இடங்களில் வங்கி ஊழியர்கள் போராட்டம்...

நாட்டு மக்களின் அவதியை குறைப்பதற்காக மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் போர்க்கால அடிப்படையில் அனைத்து ஏடிஎம்களையும் புதிய ரூபாய் நோட்டுக்களுக்கு ஏற்ப புனரமைக்க வேண்டும்; வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை பொது மக்களோடு மோதவிடும் போக்கை கைவிடவேண்டும்; மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகளும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும் பழைய ரூபாய் நோட்டுக்களை பெற அனுமதிப்பதோடு, புதிய நோட்டுக்களை தேவையான அளவுக்கு அவற்றிற்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கம் (பெபி) நாடு முழுவதும் 200 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக, சென்னை தி.நகர் பனகல் பார்க் இந்தியன் வங்கி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.தமிழரசு தலைமை தாங்கினார். இதில், அகில இந்திய செயலாளர் கே.கிருஷ்ணன், தமிழ்நாடு மாநிலச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன், வங்கி ஊழியர் பெண்கள் அமைப்பு செயலாளர் எஸ்.பிரேமலதா உள்ளிட்ட பலர் பேசினர்.

Friday, 25 November 2016

25-11-16 தனியாக டவர் கம்பெனி எதிர்ப்பு -போராட்டம்..

BSNL லின் 65000 டவர்களை பிரித்து தனியாக பாரத் டவர் கம்பெனி என்ற பெயரில் தனிநிறுவனம் அமைக்க முயற்சி செய்யும் மத்திய அரசைக்கண்டித்து BSNLEU அகில இந்தியசங்கம் இரண்டாம்கட்ட போராட்டமாக நாடுதழுவிய தர்ணா போராட்டம் நடத்திட அறைகூவல் விடுத்திருந்தது.அந்த அறைகூவலை நிறைவேற்ற தேனியில்  நடைபெற்ற கண்டன போராட்டம் . BSNLEU மற்றும் SNEA சங்கங்களை சேர்ந்த தோழர்களும் தோழியர்களும் திரளாக கலந்து கொண்டார்கள். 

25-11-16 தனியாக டவர் கம்பெனி எதிர்ப்பு போராட்டம்..

BSNL லின் 65000 டவர்களை பிரித்து தனியாக பாரத் டவர் கம்பெனி என்ற பெயரில் தனிநிறுவனம் அமைக்க முயற்சி செய்யும் மத்திய அரசைக்கண்டித்து BSNLEU அகில இந்தியசங்கம் இரண்டாம்கட்ட போராட்டமாக நாடுதழுவிய தர்ணா போராட்டம் நடத்திட அறைகூவல் விடுத்திருந்தது.அந்த அறைகூவலை நிறைவேற்ற திண்டுக்கல்லில்  நடைபெற்ற கண்டன போராட்டம் . BSNLEU மற்றும் SNEA சங்கங்களை சேர்ந்த தோழர்களும் தோழியர்களும் திரளாக கலந்து கொண்டார்கள். 

25-11-16 தனியாக டவர் கம்பெனி எதிர்ப்பு போராட்டம்..

BSNL லின் 65000 டவர்களை பிரித்து தனியாக பாரத் டவர் கம்பெனி என்ற பெயரில் தனிநிறுவனம் அமைக்க முயற்சி செய்யும் மத்திய அரசைக்கண்டித்து BSNLEU அகில இந்தியசங்கம் இரண்டாம்கட்ட போராட்டமாக நாடுதழுவிய தர்ணா போராட்டம் நடத்திட அறைகூவல் விடுத்திருந்தது.அந்த அறைகூவலை நிறைவேற்ற பழனியில் நடைபெற்ற கண்டன போராட்டம் . BSNLEU மற்றும் TNTCWU சங்கங்களை சேர்ந்த தோழர்களும் தோழியர்களும் திரளாக கலந்து கொண்டார்கள் 



25-11-16 BSNL ஊழியர்கள்+அதிகாரிகள் நாடுதழுவிய தர்ணா...

அருமைத் தோழர்களே ! நமது BSNL லின் 65000 டவர்களை பிரித்து தனியாக பாரத் டவர் கம்பெனி என்ற பெயரில் தனிநிறுவனம் அமைக்க முயற்சி செய்யும் மத்திய அரசைக்கண்டித்து BSNL அனைத்து சங்க போரம் 2ம்கட்ட போராட்டமாக நாடுதழுவிய தர்ணா போராட்டம் நடத்திட அறைகூவல் விடுத்திருந்தது.அந்த அறைகூவலை நிறைவேற்ற மதுரையில் நடைபெற்ற கண்டன போராட்டம் . BSNLEU, SNEA, AIBSNLEA, AIBSNLOA சங்கங்களை சேர்ந்த தோழர்களும் தோழியர்களும் திரளாக கலந்து கொண்டார்கள். 
நடைபெற்ற தர்ணாவிற்கு கூட்டுத்தலைமையாக தோழர்கள்.A. பிச்சைக்கண்ணு, M. சந்திர சேகர், முருகன் ஆகியோர் பொறுப்பேற்றனர். மாவட்ட செயலர்கள் தோழர்கள், சி. செல்வின் சத்யராஜ், என். சீனிவாசன். எஸ். நாகராஜ் ஆகியோர் கோரிக்கையினை விளக்கி உரையாற்றினர். மாநில சங்க நிர்வாகி தோழர். அழகர்சாமி, மற்றும் மூத்த தோழர்.வி.கே. பரமசிவம், எஸ். சூரியன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இறுதியாக தோழர். என். செல்வம் நன்றி கூற தர்ணா நிறைவுற்றது.

நவ -25, பெண்களுக்கு எதிரான உலக வன்முறை எதிர்பு நாள்.

Thursday, 24 November 2016

ஆகா . . . வென . .. எழுந்தது . . . யுகபுரட்சி . . . 24-11-16.

அருமைத் தோழர்களே ! கொடுங்கோலன் " ஜார் " மன்னனுக்கு எதிராக  மக்கள் பங்கேற்ற போர்  எதிர்ப்பு குறித்து முன்டாசுக் கவிஞன் எழுதினான், ஆகாவென எழுந்தது யுகபுரட்சி என ... குறைந்த கால அழைப்பிலேயே,   மதுரை மாவட்டஅலுவலகத்தில்  திரண்ட தோழர்களின் எழுச்சி " இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா ? என்கிற அளவில் G.M. அலுவலகமே திணறியது என்றால் அது மிகையாகாது. வழக்கம் போல் பங்கேற்பில் முதன்மை பெற்ற வத்தலக்குண்டு கோட்டக்கிளைக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்....   
24-11-16 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நமது மதுரை  மாவட்டத்தலைவர் தோழர்.A. பிச்சைக்கண்ணு தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் தோழர். C. செல்வின் சத்யராஜ் துவக்க உரை நிகழ்த்தினார். மாவட்ட சங்கநிர்வாகிகள் தோழர்கள் கே. பழனிக்குமார் , டி.கே. சீனிவாசன் மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் தோழர் எஸ். ஜான் போர்ஜியா , தோழர். பி. சந்திர சேகர் ஆகியோர் போராட்டம் குறித்து பேசினார்கள்.  ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர். என். சோணை முத்து வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக முன்னாள் மாவட்ட செயலர் தோழர். எஸ். சூரியன் உரையாற்றினார். தோழியர் வி. ராஜேந்திரி நன்றி கூற ஆர்ப்பாட்டம் இனிதே நிறைவுற்றது.