Saturday, 5 November 2016

CUG மொபைலில் BSNL அல்லாத எண்களுக்கும் பேச விரைவில் உத்திரவு...

அருமைத் தோழர்களே ! நமது BSNL-லில் C&D ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள CUG மொபைலில் BSNL அல்லாத எண்களுக்கு ரூ. 50/-க்கு பேச நிரவாகம் பரீட்சாத்த அடிப்படையில் 6 மாதம் அனுமதித்தது. பின்னர் அது நீடிக்கப்படவில்லை. இதனை சுட்டிக்காட்டி , உடனே இந்த வசதியை நிரந்திரமாக்க நமது BSNLEU  பொதுச் செயலர், தோழர்.P. அபிமன்யு  கடிதம் எழுதியிருந்தார். 5-11-16 நம் மத்திய சக்கம் சார்பில் தோழர்.ஸ்வபன் சக்கரவர்த்தி துனைப் பொதுச் செயலர், GM(ADMIN) திரு. சின்ஹா அவர்களை சந்தித்து பேசியபோது GM(ADMIN) காலதாமதம் செய்யாமல் அந்த வசதி  நீட்டிக்கும் உத்திரவை வெளியிட ஒப்புக் கொண்டுள்ளார் என்பதை நமது மத்திய சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, இதற்கான உத்தரவு விரைவில் வெளிவரும்.

No comments: