அருமைத் தோழர்களே ! நமது BSNL லின் 65000 டவர்களை பிரித்து தனியாக பாரத் டவர் கம்பெனி என்ற பெயரில் தனிநிறுவனம் அமைக்க முயற்சி செய்யும் மத்திய அரசைக்கண்டித்து BSNL அனைத்து சங்க போரம் 2ம்கட்ட போராட்டமாக நாடுதழுவிய தர்ணா போராட்டம் நடத்திட அறைகூவல் விடுத்திருந்தது.அந்த அறைகூவலை நிறைவேற்ற மதுரையில் நடைபெற்ற கண்டன போராட்டம் . BSNLEU, SNEA, AIBSNLEA, AIBSNLOA சங்கங்களை சேர்ந்த தோழர்களும் தோழியர்களும் திரளாக கலந்து கொண்டார்கள்.
நடைபெற்ற தர்ணாவிற்கு கூட்டுத்தலைமையாக தோழர்கள்.A. பிச்சைக்கண்ணு, M. சந்திர சேகர், முருகன் ஆகியோர் பொறுப்பேற்றனர். மாவட்ட செயலர்கள் தோழர்கள், சி. செல்வின் சத்யராஜ், என். சீனிவாசன். எஸ். நாகராஜ் ஆகியோர் கோரிக்கையினை விளக்கி உரையாற்றினர். மாநில சங்க நிர்வாகி தோழர். அழகர்சாமி, மற்றும் மூத்த தோழர்.வி.கே. பரமசிவம், எஸ். சூரியன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இறுதியாக தோழர். என். செல்வம் நன்றி கூற தர்ணா நிறைவுற்றது.
No comments:
Post a Comment