கறுப்புப் பணத்தைத் தடுப்பதற்கு கரன்சி நோட்டுகளை வாபஸ் பெறுவது எந்தளவுக்கு நன்மை செய்யும் என்கிற சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் புகழ்பெற்ற பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் 38 ஆண்டுகளுக்கு முன் 1978-இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் வரைந்த கார்ட்டூன் ஒன்று மீண்டும் உயிர்பெற்று தற்போது சமூக வலைதளங்களில் வலம்வந்து கொண்டிருக்கிறது.
எமர்ஜென்ஸி என்ற அவசரநிலைக் காலத்திற்குப் பிறகு மத்தியில் ஆட்சிக்கு வந்த மொரார்ஜி தேசாய் அரசு 1000, 5000, 10000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ்பெற்றது. அப்போது எச்.எம்.பட்டேல் நிதியமைச்சராக இருந்தார். மிகப்பெரும் அளவிலான கறுப்புப்பணக் குவியலில் ஒரு சிறு துணுக்கை மட்டுமே இந்த நடவடிக்கை தொடும் என்று கேலியாய்ச் சித்தரிக்கிறது இந்தக் கார்ட்டூன். கறுப்புப் பணக்காரர்களின் வாலை மட்டுமே எலிக்கூட்டுக்குள் அடங்கியதாக மத்திய அரசாங்கத்தை ஆர்.கே.லட்சுமண் நையாண்டி செய்துள்ளார்.
No comments:
Post a Comment