Thursday 3 November 2016

நோபல் பரிசு பெற்ற பொருளாதர நிபுணர் பேராசிரியர் அமர்த்யா சென் பிறந்த நாள்.

அருமைத் தோழர்களே !  நோபல் பரிசு பெற்ற பொருளாதர நிபுணர் பேராசிரியர் அமர்த்யா சென் பிறந்த நாள் - நவம்பர் 3, 1933. அமர்த்யா சென், இந்தியன் என்கிற அடையாளத்துக்கு அப்பால், மத இனபேதம் கடந்து மனித குலத்துக்கான நலப்பணியில் ஈடுபட்டிருப்பவர். அவரை பொருளாதார வல்லுநர் என்கிற அளவிலேயே நாம் தீர்மானித்துவிட முடியாது. ஏழைகளின் கல்வி, மருத்துவம், சமத்துவம் இவற்றை வலியுறுத்தும் அந்த மனிதர் அதற்கும் மேலே, நோபல் குறித்த அத்தனை சிறப்புகளுக்கும் தகுதியானவர் தாம் அவர். எல்லையற்ற அறிவு காரணமாகவே அமர்த்யாவிற்கு ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற மேலைநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்பதவி, கவுரவிப்புகள். அவருடைய அறிவைப் போலவே, அவர் கொண்ட அன்பும் இரக்கமும் கூட உயர்வானவையே !.பேராசிரியர் அமர்த்யா சென், தான் வகித்து வந்த நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்குக் காரணம் மோடி அரசின் நேரடித் தலையீடே என்று பகிரங்கமாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

No comments: