Saturday, 26 November 2016

200 இடங்களில் வங்கி ஊழியர்கள் போராட்டம்...

நாட்டு மக்களின் அவதியை குறைப்பதற்காக மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் போர்க்கால அடிப்படையில் அனைத்து ஏடிஎம்களையும் புதிய ரூபாய் நோட்டுக்களுக்கு ஏற்ப புனரமைக்க வேண்டும்; வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை பொது மக்களோடு மோதவிடும் போக்கை கைவிடவேண்டும்; மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகளும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும் பழைய ரூபாய் நோட்டுக்களை பெற அனுமதிப்பதோடு, புதிய நோட்டுக்களை தேவையான அளவுக்கு அவற்றிற்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கம் (பெபி) நாடு முழுவதும் 200 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக, சென்னை தி.நகர் பனகல் பார்க் இந்தியன் வங்கி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.தமிழரசு தலைமை தாங்கினார். இதில், அகில இந்திய செயலாளர் கே.கிருஷ்ணன், தமிழ்நாடு மாநிலச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன், வங்கி ஊழியர் பெண்கள் அமைப்பு செயலாளர் எஸ்.பிரேமலதா உள்ளிட்ட பலர் பேசினர்.

No comments: