3வது ஊதிய மாற்றக்குழுவை உடனடியாக அமைத்திடக் கோரி நமது BSNLEU சங்கம் BSNL நிர்வாகத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது . ஆர்ப்பாட்டம்... தர்ணா மற்றும் உண்ணாவிரதம் , உள்ளிட்ட போராட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில் BSNL நிர்வாகம்
ஊதிய மாற்றக்குழு சம்பந்தமாக அனைத்து மாநில நிர்வாகங்களுக்கும் 31/10/2016 அன்று விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளது.
01/01/2007 ஊதிய மாற்றத்தின் போது DPE இலாக்கா...ஊதிய மாற்றம் சம்பந்தமான வழிமுறைகளை... வழிகாட்டுதல்களை தனது 09/11/2006 தேதியிட்டக் கடிதத்தில் தெரிவித்திருந்ததாகவும் அத்தகைய வழிகாட்டுதல்கள் தற்போது DPE இலாக்கா விடமிருந்து வரவில்லையென்றும்.. அதனாலேயே ஊதிய மாற்றக்குழுவை BSNL அமைக்க வில்லை என்றும் மேற்கண்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.மேலும் DPE இலாக்காவின் வழிகாட்டுதல்கள் மற்றும் DOTயின் ஒப்புதல் வந்தவுடன்
ஊதியமாற்றக்குழு அமைக்கப்படும் எனவும் BSNL நிர்வாகம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஊதிய மாற்றத்திற்கும் வழிகாட்டுதல்கள் வேண்டும் என்ற BSNL நிர்வாகத்தின் மேற்கண்ட விளக்கம் நமக்கு ஏற்புடையதல்ல. அதற்கு மாறாக ஊதிய மாற்றக்குழுவை அமைத்து விட்டு அதற்கான ஒப்புதலை DPE மற்றும்
DOTயிடம் கோரியிருக்கலாம்.
No comments:
Post a Comment