Saturday 12 November 2016

இது சரியா . . .? . . . தவறா . . . ?

நடுவண் அரசின் ரூ. 1000 - ரூ 500 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்த திட்டத்தால் கறுப்பு பணத்தையும் பிடிக்க முடியாது, கள்ளப் பணத்தயும் ஒழிக்க முடியாது. இந்த திடீர் அறிவிப்பு மக்களை பெரும் துயரிலும், பீதியிலும் ஆழ்த்தியுள்ளது. கையில் காசு இருந்தும் மக்கள் உணவுக்கும், பொருளுக்கும் அல்லாடும் அவல நிலைக்கு தள்ளியுள்ளது. கடந்த நான்காண்டுகளில் பொதுத்துறை வங்கிகளால் சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவர்களின் விவரத்தை வெளியிட மத்திய அரசு தயாரில்லை. ரூ. 500 கோடியும் அதற்கு மேலும் வங்கிக் கடன் வாங்கி வசதியிருந்தும் திருப்பி கட்டாதவர்களின் பெயரை வெளியிட உச்ச நீதிமன்றம் பணிக்கிறது. மறுக்கின்றன மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும். அது பரம ரகசியமாம். அதை வெளியிட்டால் அந்த பெரிய மனிதர்கள் பாதிக்கப் படுவார்களாம். இவர்களா கறுப்பு பண்த்தையும் கள்ளப்பணத்தயும் ஒழிக்கப் போகிறார்கள்? இன்னுமா இந்த ஊர் பிரதமர் மோடியை நம்புகிறது?
                                                  -
இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன்

No comments: