அருமைத் தோழர்களே ! நமது திருப்பாலை கிளை சங்கத்தின் மாநாடு 07-11-16 அன்று கிளைத்தலைவர் தோழர்.பி. மணிமுத்து தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின்பு, கிளையின் செயல்பாட்டு அறிக்கையை கிளை செயலர் தோழியர்.என். வசந்தா சமர்ப்பித்தார். வரவு-செலவு கணக்கை தோழியர் ஜி. கமலவேணி சமர்ப்பித்தார். செயல்பாட்டறிக்கை மற்றும் வரவு-செலவு கணக்கு ஏற்கப்பட்ட பின்பு புதிய நிர்வாகிகள் தேர்வை மாவட்ட செயலர் தோழர் சி. செல்வின் சத்யராஜ் நடத்திவைத்தார். வரும் ஆண்டிற்கான நிர்வாகிகளாக தலைவர், செயலர், பொருளர் முறையே தோழர்கள், பி. மணிமுத்து , வி . கனகராஜன், பி. ஹேமலதா ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளை வாழ்த்தியும், நடக்க இருக்கும் அகில இந்திய மாநாடு குறித்தும் மற்றும் நமது நிறுவன பாதுகாப்பு குறித்தும் தோழர்கள்,எஸ். சூரியன், எ. பிச்சைக்கண்ணு, சி. செல்வின் சத்தியராஜ் ஆகியோர் உரை நிகழ்த்தினார். இறுதியாக புதிய செயலர் தோழர்.வி. கனகராஜன் நன்றி கூற மாநாடு இனிதேநிறைவுற்றது.
3 comments:
புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்..
MY BEST WISHES TO ALL THE NEWLY ELECTED OFFICE BEARERS TO UP HOLD OUR FORE FATHER'S OF OUR UNION WHO SACRIFICED ALL FOR THE WELFARE OF OUR WORKING CLASS.
TRULY YOURS
AYYANARSAMY R
Asst.Dist.Tr.
MY BEST WISHES TO ALL THE NEWLY ELECTED OFFICE BEARERS TO UP HOLD OUR FORE FATHER'S OF OUR UNION WHO SACRIFICED ALL FOR THE WELFARE OF OUR WORKING CLASS.
TRULY YOURS
AYYANARSAMY R
Asst.Dist.Tr.
Post a Comment