Sunday 13 November 2016

12-11-16 அந்தியில் த மு எ க ச -வின் ஓர் அருமையான நிகழ்வு.


அருமைத் தோழர்களே ! 12-11-16 மாலையில் மதுரை காமராஜர் கல்லூரியில் அரங்கத்தில் தோழர் ஸ்ரீராசா தலைமையில், தோழர் சாந்தாராம் வரவேற்புரையோடு, தோழர் ராயப்பன் பாடலோடு, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்த உண்மை விபரங்களை தோழர்கள் முத்துநிலவன் மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோரின் பொருள் பொதிந்த எழுச்சி உரை கேட்ட மனநிறைவுடன் மகிழ்ந்தோம். நமது அங்கத்திலிருந்து என்னோடு மாவட்ட செயலர் செல்வின் சத்யராஜ், உதவிச்செயலர் தோழர் செல்வம், உதவித்தலைவர் தோழர் சுப்புராயலு மாற்று தோழர்.ஜி. கே. வி . ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். இப்படி பட்ட நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகம் தேவை என்பது நமது விருப்பம்...

1 comment:

Unknown said...

பாராட்டுதலுக்குரிய நிகழ்வு..