அருமைத் தோழர்களே ! கொடுங்கோலன் " ஜார் " மன்னனுக்கு எதிராக மக்கள் பங்கேற்ற போர் எதிர்ப்பு குறித்து முன்டாசுக் கவிஞன் எழுதினான், ஆகாவென எழுந்தது யுகபுரட்சி என ... குறைந்த கால அழைப்பிலேயே, மதுரை மாவட்டஅலுவலகத்தில் திரண்ட தோழர்களின் எழுச்சி " இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா ? என்கிற அளவில் G.M. அலுவலகமே திணறியது என்றால் அது மிகையாகாது. வழக்கம் போல் பங்கேற்பில் முதன்மை பெற்ற வத்தலக்குண்டு கோட்டக்கிளைக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்....
24-11-16 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நமது மதுரை மாவட்டத்தலைவர் தோழர்.A. பிச்சைக்கண்ணு தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் தோழர். C. செல்வின் சத்யராஜ் துவக்க உரை நிகழ்த்தினார். மாவட்ட சங்கநிர்வாகிகள் தோழர்கள் கே. பழனிக்குமார் , டி.கே. சீனிவாசன் மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் தோழர் எஸ். ஜான் போர்ஜியா , தோழர். பி. சந்திர சேகர் ஆகியோர் போராட்டம் குறித்து பேசினார்கள். ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர். என். சோணை முத்து வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக முன்னாள் மாவட்ட செயலர் தோழர். எஸ். சூரியன் உரையாற்றினார். தோழியர் வி. ராஜேந்திரி நன்றி கூற ஆர்ப்பாட்டம் இனிதே நிறைவுற்றது.

1 comment:
பாராட்டுதலுக்குரிய நிகழ்வு.. கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துகள்..
Post a Comment