அருமைத் தோழர்களே ! நமது BSNL நிறுவனத்தில் உள்ள 65000 டவர்களை தனியாக பிரித்து, தனிக்கம்பெனியாக்கி அடுத்த கட்டமாக தனியார் கையில் ஒப்படைக்கும் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை ஏற்கனவே, இந்திய நாடு முழுமைக்கும் முதற்கட்டமாக கடந்த 27-10-16 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மத்திய அரசு நமது BSNL பொதுத்துறையை அழிக்க நினைக்கும் திட்டத்திற்கு எதிராக 2-ம் கட்டமாக இந்திய நாடு முழுவதும் எதிர்வரும் 25-11-16 அன்று தார்னா நடத்திட அனைத்து மத்திய சங்கங்கள் சார்பாக அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை தல்லாகுளம் லெவல்-4 வளாகத்தில் 25-11-16 காலை 10 மணி முதல் நடைபெற உள்ள தர்ணா போராட்டத்தில் சங்க பேதம் இன்றி, கேடர் பேதம் இன்றி அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
1 comment:
இயக்கம் வெற்றியடைய வாழ்த்துகள் தோழா.
Post a Comment