Monday, 7 November 2016

நவம்பர்-7, புரட்சி தினத்தன்று -எழுச்சிமிகு செயற்குழு...

அருமைத் தோழர்களே ! நவம்பர்-7, புரட்சி தினத்தன்று - நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் எழுச்சிமிகு செயற்குழு  கூட்டம், மாவட்டத்தலைவர் தோழர்.A. பிச்சை கண்ணு  தலைமையில் மதுரை CSC-TRC-யில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது...
செயற்குழுவின் ஆய்படு பொருள்களின்  மீதான முன்மொழிவு உரையை , மாவட்ட செயலர் தோழர். C. செல்வின் சத்யராஜ் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து , ஆய்படு பொருளின் மீதான விவாதத்தில் அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும், கிளப் செயலர்களும் பங்கு பெற்று செழுமை படுத்தினர். மாநில சங்க நிர்வாகிகள் தோழர்.எஸ். ஜான் போர்ஜியா மற்றும் பி. சந்திரசேகர் இருவரும் வாழ்த்துரை வழங்கினர்.
மாவட்ட செயலர் தொகுப்புரையில்,   நாம் தொடர்ந்து செய்துவரும் BSNL நிறுவன வளர்ச்சி பணிகளின் அடுத்த கட்டமாக, லேண்ட் லைன் மற்றும் ப்ராட்பாண்ட் புதிய இணைப்புகள் கொடுப்பதற்கான ஆக்கபூர்வமான பணிகளில் இறங்குவது என்றும், மேலும் வில்லாபுரம்கோட்ட பொறியாளரின் சங்க விரோத போக்கிக்கிற்கு எதிராகவும், திண்டுக்கல் (ரூரல்) கோட்டபொறியாளரின் சங்க விரோத போக்கிக்கிற்கு எதிராகவும் கிளை சங்கங்கள்  போராட்டத்தை எதிர்வரும் 16-11-16 அன்று ஸ்தலமட்டத்தில் நடத்துவது என்றும்,  பிரச்சனை தீர்விற்காக மாவட்ட நிர்வாகத்துடன் கடிதம் கொடுத்து விவாதிப்பது என்றும், அதற்க்கு பின்னும் பிரச்சனை தீராவிடில் மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் மாவட்ட சங்கம் சார்பாக தொடர் உண்ணாவிரத போராட்டம் மாவட்டந்தழுவிய அளவில் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. 
இறுதியாக மாவட்ட பொருளர் தோழர். பி. சந்திரசேகர் நன்றி உரை கூற மாவட்டச் செயற்குழு இனிதே நிறைவுற்றது.


1 comment:

Unknown said...

பெருமைக்குரிய நவம்பர் புரட்சிதின வாழ்த்துகள் அனைவருக்கும்..