Wednesday, 23 November 2016

கர்நாடக இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவு ...


புகழ்பெற்ற கர்நாடகஇசைமேதை பாலமுரளி கிருஷ்ணா செவ்வாய்க்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 86.கடந்த சில மாதங்களாக, உடல் நலக்குறைவால் பாலமுரளி கிருஷ்ணாஅவதிப்பட்டு வந்த நிலையில், சென்னை ஆர்.கே. சாலையிலுள்ள இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது.பால முரளிகிருஷ்ணா, ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மங்களப்பள்ளி என்ற இடத்தில் 1930 ஆம்ஆண்டு பிறந்தவர். தாய் சூர்ய காந்தம்மாள், தந்தை பட்டாபி ராமய்யா. இருவருமே இசைக் கருவிகளைவாசிப்பதில் தேர்ந்தவர்கள்.இதனால், பாலமுரளி கிருஷ்ணாவுக்கு இயல்பாகவே இசையில் ஆர்வம் ஏற் பட்டது. ஐந்து வயதிலேயே ராகத்தைக் கண்டுபிடிக்கும் ஞானமும், தாள லயமும், ஏழு வயதில் கச்சேரி செய்யும் அளவுக்கான திறமையும் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு அமைந்தது. முரளி கிருஷ்ணா என்பதுதான் இவரின் இயற் பெயர். 8 வயதில் முரளி கிருஷ்ணாவின் முதல் கச்சேரியைக் கேட்டுவிட்டுஹரிகதாபுகழ் முசுநுரி சூரிய நாராயண மூர்த்தி பாகவதர்தான், ‘பாலஎன்ற அடைமொழியைச் சேர்த்தார்.15 வயதிற்குள் 72 மேள கர்த்தாக்களை ஆளும் திறமையும், அவற்றை பயன் படுத்தி கிருதிகளை உருவாக்கும் அசாத்தியமும் அவருக்கு வாய்த்தது. தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் கீர்த் தனை, பாடல்கள், வர்ணம், ஜாவலி, தில்லானா என அவர் உருவாக்கிய இசைப் படைப்புகள் மட்டும் 400-க்கும் அதிகம்.  அன்னாருக்கு நமது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

1 comment:

Unknown said...

நானும் உங்களோடு...