அருமைத் தோழர்களே ! அனைவருக்கும் வணக்கம் ...நமது மாவட்ட சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் கடந்த 10.02.2014 அன்று,நமது மாவட்ட சங்கத்தின் தலைவர் தோழர்.சி .செல்வின் சத்தியராஜ் அவர்கள் தலைமையில் ,மதுரை தல்லாகுளம்,CSC மனமகிழ் மன்றத்தில் நடைபெற்றது. மாவட்ட சங்க நிர்வாகிகள்,கிளைச்செயலர்கள்,முன்னணித் தோழர்கள் என,12 பெண்கள் உட்பட 47 தோழர்கள் கலந்து கொண்டனர். ஏற்கனவே,அறிவிக்கபட்டிருந்த ஆய்படு பொருளுக்கு முன்பாக,சமிபத்தில் மரணமடைந்த தோழர்கள் R .பாபு, TTA , ஆண்டவர், TM, முனியசாமி,JTO ஆகியோருக்கு மாவட்ட உதவிச் செயலர்,தோழர்.V.சுப்புராயலு அஞ்சலியுரை நிகழ்த்தியதை ஒட்டி,மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இரு நிமிடம் அஞ்சலி செலுத்தியது.
அதன்பின் ஆய்படு பொருளின் மீது மாவட்ட செயலர் தோழர்.எஸ்.சூரியன் அவையில் முன்மொழிவை சமர்ப்பித்தார். அவற்றின் மீதான விவாதத்தை பெருவாரியான தோழர்கள் செய்தனர்.அதனடிப்படையில் இறுதியாக கீழ்க்கண்ட முடிவுகளை மாவட்ட சங்கம் எடுத்துள்ளது.
1). நமது மதுரை மாவட்டத்தில் -மகளீர் தினம்,BSNLEU-தினம்,பகத்சிங்-தினம் அகியவற்றை ஒருங்கிணைத்து "முப்பெரும் விழா " நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
2). 22-03-2014 அன்று BSNLEU தினத்தை கொண்டாடும் வகையில் அனைத்து கிளைகளிலும் சங்க கொடி ஏற்றி இனிப்பு வழங்கி சிறப்பாக செய்வது.
3). சென்னை சொசைட்டி தேர்தலில் நமது சங்கத்தின் சார்பாக 4- RGB களுக்கான பதவிகளில் போட்டி இடுவது என்றும்,அதே சமயத்தில் NFTE சங்கத்துடன் கூட்டணி ஏற்படும் பட்சத்தில் BSNLEU-3.,NFTE-1 என்ற அடிப்படையில் பிரித்துக்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.(தற்போது நமது சங்கத்திற்கும்,NFTE சங்கத்திற்கும் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டுள்ளது.)
4). நமது சங்கத்தின் சார்பாக தோழர்கள் S.ஜான் போர்ஜியா, P. சந்திர சேகர், V. சுப்புராயலு T. ஈஸ்வரன் ஆகியோர் நமது BSNLEU வேட்பாளர்கள் ஆக மாவட்டசங்கத்தால் தேர்ந்து எடுக்கப்பட்டார்கள்.(NFTE சங்கத்துடனான கூட்டணியை பொருத்தவாறு நமது வேட்பாளர்கள் மாறுதல் இருக்கும்.)
முப்பெரும் விழாவிற்கான தேதி ,இடம்,நேரம் ஆகியவை குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். தோழர்கள்,இப்போதிருந்தே திட்டமிடல், பணிகளை விரைந்து செய்திட வேண்டுமாய் மாவட்ட சங்கம் அனைவரையும் அன்போடு வேண்டிக்கொள்கிறது
............என்றும் தோழமையுடன்,எஸ். சூரியன்.
No comments:
Post a Comment