Tuesday, 18 February 2014

மூவர் மரணதண்டனை வழக்கில் 18ந்தேதிதீர்ப்பு . . .

ராஜிவ்காந்தி கொலை வழக்கில், மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் செவ்வாயன்று தீர்ப்பு வழங்க உள்ளது.தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கருணை மனு மீது முடிவெடுக்க தாமதம் ஏற்பட்டதைக் காரணம் காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த வழக்கில், கடந்த 4ம் தேதி விளக்கமளித்த மத்திய அரசு, 3 பேரின் கருணை மனு மீதான தாமதத்திற்கு ஆட்சி மாற்றம், உள்துறை அமைச்சர்கள் மாற்றம் என பல்வேறு காரணங்கள் இருப்பதாக தெரிவித்தது.மனுதாரர்கள், சிறையில் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த மனுதாரர்களின் வழக்கறிஞர், மரண தண்டனை கைதிகளின் மனநிலை மகிழ்ச்சியுடன் இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது என்றார். இதைத் தொடர்ந்து வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.கருணை மனு மீதான தாமதத்தைக் காரணம்காட்டி சில வாரங்களுக்கு முன் 15 பேரின் தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

No comments: