Monday, 17 February 2014

அடைக்கலசாமிகள் !

வங்கிக்கு வந்த விவசாயி ஒருவரை பார்த்து."என்னய்யா உன் பேர் என்ன ? ஏற்கனவே,வாங்கின கடனை அடைச்சிட்டியா ?" என்று வங்கி மேலாளர் கேட்கிறார்."இரண்டு கேள்விக்கும் ஒரே பதில் ,அடைக்கலசாமி." என்று விவசாயி சொல்கிறார்.இது 25 ஆண்டுகளுக்கு முன்னர் 'உழவன் உரிமை'ஏட்டில் வெளிவந்த ஒரு நகைச்சுவைத் துணுக்கு,அந்தத் துணுக்கு ஒரு அப்பாவி அடைக்கலசாமி பற்றியது.
ஆனால்,இன்றைக்கு இந்திய நாட்டில் மரியாதைக்குரிய பெரும் புள்ளிகள் பலர் "அடைக்கலசாமி "களாக மாறி வருகின்றனர்.விஜய் மல்லையா தொடங்கி ,அம்பானி.அமிதாப் பச்சன் என்று ஏகப்பட்ட "அடைக்கல சாமி " கள் நாட்டில் உருவாகி விட்டனர்.
நாட்டுடைமைக்கப்பட்ட வங்கிகளின் மும்பை மெட்ரோ கிளைகள் மூலமெ,மகாராஷ்ட்ராவில் 53 சத வீத விவசாயக்கடன் வழங்கப் பட்டி ருக்கிறது.அதாவது அம்மாநில விவசாயிகளில் பெரும்பான்மையினர் மும்பை பெருநகரத்தில் வாழ்கின்றவர்கள் என்பதே அதன் அர்த்தம்.வேளாண் தொழிலும் (அக்ரோ இண்டஸ்ட்ரிஸ் )விவசாயம் என்ற இலக்கணத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் அம்பானி,அமிதாப்பச்சன் போன்றவர்கள் எல்லாம் இன்று விவசாயிகளாக மறுபிறப்பு எடுத்து,அந்த 'மறுபிறவிப்' பயனாக விவசாயிகளுக்கு கிடைப்பதை விட,குறைந்த வட்டிக்கு கடன் பெற்று வருகின்றனர்.ஆம்.விவசாயத்திற்கு மிகவும் தேவைப்படும் டிராக்டர் கடனுக்கு விவசாயி செலுத்தும் வட்டி 14 சதவீதம்.விவசாய குளிபதனக் கிடங்குகள் (COLD STORAGE)காட்டுவதற்கு அம்பானி செலுத்துவது 4 சதவீதம் மட்டுமே.
ஆனால்,இத்தகைய பெருந்தனக்காரர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் (2007-2013)ரத்து (WRITE OFF)செய்யப்பட்ட கடன் அளவு ரூ .1,41,100 கோடி,ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் ரூ.5 லட்சம் கோடிக்கு வாரி வழங்கப்படும் வரி ரத்து என்பதெல்லாம் தனிக்கதை.
அப்பாவி அடைக்கலசாமியில் தொடங்கிய கதை இன்று அம்பானி,அமிதாப் அடைக்கலசாமிகளில் முடிவடைந்திருக்கும் ரகசியம் இது தான்...E.M.ஜோசப் (தீக்கதிர்)

No comments: