Wednesday, 12 February 2014

இதுவும் . . . குஜராத் . . .உண்மைநிலை . . .

இதுதான் குஜராத் 
குஜராத்தில் இருக்கும் ஆனந்த் நகரம் ஒரு காலத்தில் வெண்மைப் புரட்சியின் அடையாளம். புகழ்பெற்ற அமுல் பால் நிறுவனத்தின் பிறப்பிடம் இந்த ஊர்தான். ஆனால் இன்றோ, ஆனந்த் நகரம் வாடகைத் தாய்களின் தலைநகரமாக அறியப்படுகின்றது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவோர் உலகம் முழுவதும் இருந்தும் ஆனந்த் நகரத்துக்குக் குவிகின்றனர்.இங்கு இந்த முறையில் ஓர் ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் பெற்றெடுக்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவிலேயே வாடகைத் தாய்க்கு மிகவும் குறைந்தத் தொகை வழங்கப்படுவது இங்குதான். அதிகபட்சமே 50 ஆயிரம் ரூபாய்தான்! எனினும் அந்தப் பணத்தை சம்பாதிக்கக்கூட வேலைவாய்ப்பு இல்லாத சூழலில், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏழைகள் வாடகைத் தாய்களாக இருக்கப் போட்டி போடுகின்றனர்!

-ஆனந்த விகடன் (12.2.14)

No comments: