Friday 28 February 2014

28.02.2014 அத்து மீறலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்...

அருமைத்தோழர்களே! வெறும் மும்பை & டெல்லி ஆகிய இரு இடங்களில் மட்டும் செயல் படும் MTNL தொலை தொடர்பு நிறுவனத்தை,இந்தியா முழுவதும் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் நமது BSNL தொலை தொடர் நிறுவனத்துடன் தீடிரென இணைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது .இம் முயற்ச்சி மிக,மிக கண்டிக்கவேடிய,தடுக்கவேண்டிய ஒன்றாகும்.
BSNL, MTNL  ஊழியர்களின் ஊதிய விகிதத்தில் வேறுபாடு உள்ளது.
BSNL, MTNL  ஊழியர்களின் பென்சன் திட்டத்தில் வேறுபாடு உள்ளது.
BSNL, MTNL  ஊழியர்களின் பதவி உயர்வுத் திட்டத்தில் வேறுபாடு உள்ளது.
BSNL, MTNL  நிறுவனங்களின் கட்டமைப்பு வேறுபாடு உள்ளது.
MTNL  நிறுவனத்தில் ஏற்கனவே 46% பங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
MTNL  நிறுவனத்தின் கடன் சுமை ஏற்கனவே 12000 கோடி உள்ளது .
MTNL நிறுவனத்தின் வருமானத்திற்கும் , ஊ தியத்திற்கும் விகிதாச்சாரம் 102% ஆகும்.
இப்படி, நிறுவனக் கட்டமைப்பிலும்
ஊழியர்களின் நலத்திட்டங்களிலும்
முற்றிலும் முரண்பாடு இருக்கக் கூடிய
இரண்டு நிறுவனங்களை இணைப்பதற்கு முன்
இந்த முரண்பாடுகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
அதற்கு முன், அவசர கதியில் இணைப்பு என்பது கூடாது
என்ற முடிவினை FORUM OF BSNL UNIONS AND ASSOCIATIONS எடுத்துள்ளது.
அதன் அடிப்படையில்,
முரண்பாடுகளுக்குத் தீர்வு காணும் முன் இணைப்பு கூடாது
என்பதை வலியுறுத்தி . . . . .
28.02.2014 அன்று மதியம் 1 மணிக்கு மதுரை பொது மேலாளர் அலுவலகம்,  முன்பு
போரத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,இப் போராட்டத்திற்கு NFTE சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர்.எஸ். சிவகுருநாதன்,தலைமை தங்கினார். போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி BSNLEU மாவட்ட செயலரும்,போரத்தின் கண்வீனரான தோழர்.எஸ். சூரியன் உரை நிகழ்த்தினார். கோரிக்கைகளை விளக்கி SNEA மாவட்ட செயலர் தோழர்.எஸ்.சந்திரசேகர், TEPU சங்கத்தின் மாவட்ட பொருளர், தோழர்.டொமினிக் சேவியோ,  AIBSNLEA அகில இந்திய சங்கத்தின் அட்வைசர் தோழர். வி.கே.பரமசிவன்,BSNLEU மாநில அமைப்புச் செயலர்,தோழர்.சி .செல்வின் சத்தியராஜ் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். இறுதியாக AIBSNLEA மாவட்ட செயலர் தோழர். எஸ்.கருப்பையா நன்றி கூறி முடித்துவைத்தார். கோரிக்கைகள் குறித்து தோழர். G.K.வெங்கடேசன், கோஷங்களை எழுப்பினார்.  குறுகிய கால அழைப்பில் 12 பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டது பாராட்டத்தக்கது. BSNL + MTNL இணக்க நினைக்கும் மத்திய அரசின் மக்கள் விரோத,ஊழியர் விரோத செயலுக்கு எதிராக நமது மத்திய அமைப்புக்கள் விடுக்கும் அடுத்த கட்ட போராட்டத்தை இன்னும் சிறப்பாக செய்திட இப்போதிருந்தே தயாராகுவோம்.
திண்டுக்கல்லில் 28.02.2014 மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர்.பி .சந்திரகுமார் SNEA,தலைமை தாங்கி உள்ளார்,BSNLEU செயலர் தோழர்.J.ஜோதிநாதன் துவக்கவுரை நிகழ்த்தி உள்ளார்.BSNLEU மாநில துணைத்தலைவர் தோழர்.எஸ். ஜான்போர்ஜியா கோரிக்கையை விளக்கி உரை நிகல்த்திஉள்ளார்,SNEA பொருளர் தோழர்.கே.முத்துக்குமார் நன்றிகூறினார். இந் நிகழ்ச்சியில் 5 பெண்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர் மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.     ..........என்றும் தோழமையுடன் எஸ்.சூரியன்,D/S-BSNLEU 
  

No comments: