Monday, 17 February 2014

தெலங்கானா மசோதாவை அரசு தாக்கல் செய்ததா? - CPI(M).

புதுடெல்லி: “கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. அதற்கு மார்க்சிஸ்ட் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. ஆனால், தெலங்கானா மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்துவிட்டதாக அரசு கூறுவதை ஏற்க முடியாது. அவையில் கூச்சல், குழப்பம், ரகளை ஏற்பட்டு செயல்படாத நிலையில் இருந்தது. அந்த நேரத்தில் மசோதாவை தாக்கல் செய்துவிட்டோம் என்று அரசு கூறுவதை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்துவிட்டன. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியைசந்தித்தபின்னர் மேற்கண்டவாறுதெரிவித்தார்.
தெலங்கானா விவகாரத்தில் அரசின் முயற்சிக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, நேற்று பிரகாஷ் காரத்தை சந்தித்து ஆதரவு திரட்டினார். இது மிகவும் முக்கியமான மசோதா, அது பற்றி அவையில் விரிவான விவாதம் நடத்த வேண்டும். எல்லா கட்சிக்கும் எம்.பி.க்களுக்கும் இந்த விவகாரத்தில் பேசுவதற்கு உரிமை உள்ளது. அரசு இதை தவிர்த்து அப்படியே விவகாரத்தை மூடி மறைக்க முடியாது என்றார்.
ஆந்திராவை பிரித்து தெலங்கானா பகுதியை தனி மாநிலமாக உருவாக்கும் முயற்சியை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. எனவே தெலங்கானா மாநிலம் அமைக்கும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு ஆதரவு தருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஜெகன் மோகன் கேட்டுக் கொண்டார். தெலங்கானா தனி மாநிலம் அமைக்கும் முயற்சியை எல்லா கட்சிகளும் எதிர்க்க வேண்டும் என்று ஜெகன் மோகன்ரெட்டி கேட்டுக் கொண் டார். “அப்படி ஒருவேளை இதை அனுமதித்தால், இதுவே ஒரு தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். இன்று ஆந்திரா, நாளை, இது கர்நாடகா, தமிழ்நாடு, வங்காளம் என்று தொடர்ந்துவிடும்என்றார்

No comments: