Friday, 14 February 2014

மதியஉணவுத் தொழிலாளர்கள் நாடாளுமன்றம் நோக்கி.

புதுதில்லி, பிப். 14-நாடாளுமன்ற வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு பொதுச்செயலாளர் தபன்சென் எம்.பி. உரைநிகழ்த்தினார்.மதிய உணவுத் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், புதுதில்லி, நாடாளுமன்ற வீதியில் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி/ஆர்ப்பாட்டம் 14.02.2014 வியாழனன்று நடைபெற்றது.சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள்தான் மதிய உணவுத் தொழிலாளர்களாகப் பணி புரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. அதுவும் ஆண்டில் பத்து மாதங்களுக்கு மட்டும்தான். அவர்களுக்கு வேறு எந்த சமூகப் பாதுகாப்பும் கிடை யாது. இவ்வாறு நாடு முழுவதும் சுமார் 26 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் பெரும் பாலானவர்கள் பெண்கள். 2013 மே மாதத்தில் நடைபெற்ற 45வது சர்வதேசத் தொழிலாளர் மாநாடு, மதிய உணவுத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் அனைவரையும் தொழிலாளர்களாக அங்கீகரித்திட வேண்டும் என்றும். அவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூகப்பாது காப்புத் திட்டங்களை அமல்படுத்திட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.இதனை வழங்குவதாக மத்திய மனிதவள ஆற்றல் அமைச்சரும் அம்மாநாட்டின்போது வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை எதுவும் நடந்திடவில்லை. எனவேதான் தங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றும் மதிய உணவுத் தொழிலாளர்கள் வியாழனன்று நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி/ஆர்ப்பாட்டம் மேற்கொண்டார்கள். 45வது சர்வதேசத் தொழிலாளர் மாநாட்டின் பரிந்துரைகளை அமல்படுத்து.குறைந்தபட்ச ஊதியம் வழங்கிடு, நாட்டின் 12 மாதங்களுக்கும் ஊதியம் வழங்கிடவும், 180 நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கிடவும், மதிய உணவு வழங்கும் திட்டத்தை பன்னாட்டு அரசு சாரா நிறுவனங்களிடம் ஒப்படைக்காதே, சமூக பாதுகாப்பு மற்றும் பணிப்பாதுகாப்பு வழங்கிடவும், மதிய உணவுத் தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கிடவும், மதிய உணவுத் தொழிலாளர்கள் அனைவரையும் ஜன ஸ்ரீ பீமா யோஜனா திட்டத்தின்கீழ் கொண்டுவா - என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி14.02.2014 வியாழனன்று காலை, அகில இந்திய மதிய உணவுத் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், புதுதில்லி, நாடாளுமன்ற வீதியில் நாடாளுமன்றம் நோக்குப் பேரணி, ஆர்ப்பாட்டம் போராட்டம் நடை பெற்றது.இப்பேரணி ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்புக்குழுவின் கன்வீனர் .ஆர். சிந்து தலைமை வகித்தார். சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் எம்.பி. பேரணி, ஆர்ப் பாட்டத்தைத் துவக்கி வைத்து உரையாற்றினார். பேரணி, ஆர்ப்பாட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி, பாசுதேவ் ஆச்சார்யா ஆகிய தலைவர்களும் உரையாற்றினார்கள்

No comments: