Sunday, 23 February 2014

செய்தி ......துளிகள் ......நமது அரங்கம்

பெரிதும் எதிர்பார்க்கப்படும், தொலைத்தொடர்பு நிறுவனங்களை இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் 10 நாள்களுக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியத் தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) பிராட் பேண்ட் கருத்தரங்கில் பங்கேற்ற தொலைத் தொடர்புத் துறை செயலர் எம்.எப். பரூக்கி கூறுகையில்:
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் ஒரு வாரம் அல்லது 10 நாள்களில் வெளியிடப்படும்என்றார்.வழிகாட்டு நெறிமுறைகளை அங்கீகரித்துள்ள அதிகாரமளிக் கப்பட்ட அமைச்சர்கள் குழு, லாக்-இன் காலத்துக்கான தொலைத்தொடர்பு உரிமையைப் பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் மீறல், ஈக்விட்டி விற்பனை ஆகியவை தொடர்பான சட்டப்பூர்வ ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. புதிய நெறிமுறைகளின்படி, இணைக்கப்பட்ட நிறுவனத்தின் சந்தை பங்கானது 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.அலைக்கற்றைகளை ஏலத்தின் மூலம் பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இணைப்புக்குப் பின் ரேடியோ அலைகளைப் பெற அரசுக்கு கூடுதல் பணம் செலுத்தத் தேவையில்லை. தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களை இணைக்கும் நிறுவனங்கள் மட்டும், ஒதுக்கப் பட்ட அலைக்கற்றைகளுக்கும் சந்தை மதிப்புக்கும் இடையிலான விலை வித்தியாசத்தை அரசுக்கு செலுத்த வேண்டும்.
அலைக்கற்றைகளைப் பெறுவதற்கு ஏலம் ஒரு வழி. இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் வேறு வகையில் அலைக்கற்றையை அடைவதற்கான வழியாகும்என பரூக்கி தெரிவித்துள்ளார்.
ஊதிய இழப்பு ஆய்விற்கான உயர்மட்டக்குழு1.1.2007க்குப் பிறகு பணி நியமனம் பெற்றNON-EXECUTIVE மற்றும் EXECUTIVE ஊழியர்களுக்கு
ஊதிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது.EXECUTIVE ஊழியர்களின் இந்தப் பிரச்சனையின் தீர்வுக்குஒரு உயர்மட்டககுழு அமைக்கப்பட்டிருக்கிறது.
அந்தக்குழுவின் ஆய்படு பொருளில்NON-EXECUTIVE ஊழியர்களின் ஊதிய இழப்பும் சேர்க்கப்பட்டுதீர்வு காணப்பட வேண்டும் என்று
CMDக்கு நமது பொதுச்செயலர் கடிதம் எழுதி உள்ளார்.
அடிப்படை ஊதியத்துடன் 50% பஞ்சப்படி இணைப்புமத்திய அரசு ஊழியர்களின் ஊதிய மாற்றத்திற்காக7வது ஊதியக்குழு அமைக்கப்பட்டிருப்பதை அனைவரும் அறிவோம்.தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 90% பஞ்சப்படி பெறுகிறார்கள்.மத்திய அரசு ஊழியர்களின் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை அடுத்து தற்போது, அடிப்படை ஊதியத்துடன்50% பஞ்சப்படிஇணைக்கப்பட உள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.
BSNL ஊழியர்களுக்கு 50% பஞ்சப்படியைஅடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்என்ற கோரிக்கையை நமது சங்கம் ஏற்கனவே எழுப்பியுள்ளது.மிக சமீபத்தில் நடந்து முடிந்த ராஜ்கோட் மத்தியச் செயற்குழுவிலும்இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

No comments: