ஐ.பி.எம். நிறுவனம் தனது ஊழியர்கள் 15 ஆயிரம் பேரை பணியிலிருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளது.முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம் தங்களது கம்பெனியில் மறுசீரமைப்பு பணியை துவக்கியுள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதிலும் இருந்து 15000 பேர் பதவி இழப்பார்கள் என தெரிகிறது. குறிப்பாக இந்தியா, பிரேசில் மற்றும் ஐரோப்பியா பகுதியில் செயல்படும் இந்நிறுவனத்தின் ஊழியர்களில் பெரும்பாலனவர்கள் வீட்டுக்கு போகும் நிலை ஏற்படும் என தெரிகிறது.இது குறித்து அந்நிறுவனத்தின் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளரான லீ கான்ராட் கூறும்போது, 15 ஆயிரம் ஊழியர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். இந்நிறுவனத்தில் உலகம் முழுவதும் 4 லட்சம் பேர் பணியாற்றி வரும் நிலையில், இந்தியாவில் மட்டும் 1 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.அந்நிறுவனத்தின் இந்த முடிவால், இந்தியாவில் தான் பெரிய அளவு பாதிப்பை ஏற்படும் என தெரிகிறது
No comments:
Post a Comment