Friday 14 February 2014

காதல் ஒரு நாள் கூத்தல்ல; உள்ளத்தில் பூப்பது...

நீ வாழ்ந்த போது நானும் வாழ்ந்தது அழகுமிக்கது..”- இந்த வரிகள் மோகம் கொப்பளிக்கும் இளமையில் எழுதியதல்ல; மருத்துவ மனையிலிருந்த இறுதி நாட்களில் பாப்லொ நெருதா எழுதிய இறுதிக் காதல் கவிதையின் வரிகள்.காரல் மார்க்சின் புதல்வி எழுதிய நினைவுக் குறிப்பொன்றில் தன் தந்தை மார்க்ஸ் தன் தாய் ஜென்னிக்கு அவரின் இறுதிக்காலத்தில் எழுதிய கடிதம் ஒன்றை அவர் மரணத்துக்குப் பிறகு படித்ததாகவும் அது பதினாறு வயது இளைஞன் எழுதியதைப் போல் காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதப் பட்டிருந்ததாகவும் நினைவு கூர்கிறார் .
காதலை ஏன் எதிர்க்கிறார்கள் ? சாதி கலப்பதை - மதம் கலப்பதை - அன்புதன்னில் வையம் செழிப்பதை அவர்களால் சகிக்க முடிவதில்லை; ஆணாதிக்கமும், சாதி மதவெறியும் அவர்கள் குருதியில் சாராய போதையாய் கலந்துள்ளதால் காதலர்களை கவுரவக் கொலை செய்யவும் துணிகின்றனர் .வாலண்டைன் தினம் எனப்படும் காதலர் தினத்துக்கு ஒரு வரலாறு உண்டு.17ஆம் நூற்றாண்டில் யுத்த வெறி பிடித்திருந்த ஸ்பெயினில் மரணஓலத்தை நிரந்தரமாக்கிக் கொண்டிருந்த பொழுது ; யுத்தத்திற்கு எதிராய்காதலை தூக்கிப்பிடித்தார் பாதிரியார் வாலண்டைன் . திருமணமானவர் களுக்கு யுத்தத்திலிருந்து விலக்கு வழங்கப்பட்டபோது ஒரே நாளில் ஆயிரம் பேருக்கு திருமணம் செய்துவைத்து கொடுங்கோலன் கொலைவாளுக்கு இரையானார் .
அந்நாளே காதலர் தின மானது . மதவெறிக்கு சாதிவெறிக்கு எதிராய் காதலைப் போற்றுவது இன்றைய காலத்தின் கட்டளை .ஆயினும் விடலைப் பருவ காதல் தவிர்க்க வேண்டியதே ! காதல் ஒரு போதும் பொறுப்பற்றதாக இருக்க முடியாது; சமூகப் பொறுப்புஅதாவது சாதி,மத பேதமற்ற; ஆணாதிக்க மற்ற சமத்துவ சமூகம் காணும் பொறுப்பும்;தனிமனித வாழ்க்கைப் போரில் இணைந்து பயணிக்கும் தனிமனித பொறுப்பும் காதலுக்கு நிறையவே உண்டு. இந்த பழுதற்ற பார்வையோடுதான் நாம் காதலைப் போற்றுகிறோம்.எதையும், தன் நுகர்வு சந்தைக்கு சாதகமாக வளைக்கும் பன்னாட்டு நிறுவனங் கள் காதலர் தினத்தையும் வியாபார தினமாக்கிவிட்டது ; இதன் வலையில் விழுவது அல்ல காதல் . காதல் ஒரு நாள்கூத்தல்ல.
இளைஞர்களை பெரும் பாலான தமிழ் சினிமாக்கள் கொச்சைப் படுத்துகின்றன . இந்த அவமானத்தை புறந்தள்ளுவோம். காதல் புனிதமானது என அதற்கொரு புனுகுபூசி அந்நியமாக்குவதிலோ தள்ளிவைப்பதிலோ தற்கொலைக்குத் தூண்டுவதிலோ எந்தப் பொருளும் இல்லை.மோடியும் குருமூர்த்திகளும் பெண்களை தெய்வத்தோடு ஒப்பிட்டும் புனிதப்படுத்தியும் அபினிபோதை ஊட்டும் விதத்தில் பேசும்மொழிகள் ஆபத் தானவை . தங்கக்கூண்டில் சிறைவைக் கப்பட்டாலும் சிறகுவெட்டப்படுகிறது என்பதுதானே பொருள். பண்பாட்டை காக்க - சாதி மதப் பெருமையை காக்க- கன்னிகாதானம் என்கிற பெயரில் திருமண வியாபாரத்தில் பெண்ணை அடிமையாக விற்பதைத்தான் பெருமையாக அலங்காரமாகப் பேசுகிறார்கள். அந்த மோசடியை அம்பலப்படுத்த காதலை உயர்த்திப்பிடிப்போம் !காதலென்பது காமம் அல்ல ; ஆனால் காமமின்றி காதலும் இல்லை.
வெறும் உடல் கவர்ச்சி காதலாகாது. ஜென்னி பேரழகி; மார்க்ஸ் நேரெதிர். இவர்களுக்குள் காதல் முகிழ்த்தது எப்படி ? காதல் உடலைப் பார்க்காது உள்ளத்தைப் பார்க்கும் ; காதல் பணத்தைத் தேடாது; பண்பை சேர்க்கும். பட்டுக் கோட்டை பாடுவதுபோல், “ உனக்கு நானும் எனக்கு நீயும் / உரிமைத்தானென்று / கணக்கில்லாத கதைகள் பேசி ..” கொண்டாட வேண்டியதன்றோ காதல். “உன்னை அல்லால் ஒரு பெண்ணைஇனி நான் உள்ளத்தினாலும் தொடமாட்டேன்என அவன்கூறஉன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தரமாட்டேன்என அவள் பதில் கூற கண்ணதாசன் தீட்டிய வரிகளின் ஜீவனை காலமெல்லாம் போற்றுவோம்.காதலுக்காக காத்திருப்பதும் சுகமே! “ இருண்ட நடு நிசியில் பனிக்காகக் காத்திருக்கிறது மண் ,அன்பே ! உனக்காக அப்படி நான் காத்திருக்கிறேன் !வெண்மேகங்கள் வானவில்லுக் காகக் காத்திருக்கின்றன.அன்பே ! உனக்காக அப்படி நான் காத்திருக்கிறேன் ! “ நேற்றுநாளைக்காகக் காத்திருக்கிறது , “ பழமைபுதுமைக்காகக் காத்திருக் கிறது ,அன்பே ! உனக்காக அப்படி நான் காத்திருக்கிறேன் !” - என ஹரீந்திர சட்டோபாத்யாவின் கவிதை போல காதலுக்காக இளைஞனே ! இளைஞியே ! காத்திரு !
ஆனால் , காதல் என்பது எது ? எதற்காக ? அதன் மெய்ப்பொருளென்ன என்கிற தெளிவைத்தேடிக் கண்டறி !நளாயினி தாமரைச் செல்வன் என்ற தமிழ் ஈழப் பெண்கவிஞர் பாடுகிறார் ; “ காதல் என்றால்என்னவென்று தெரியுமா உனக்கு ?எனக்கே எனக்கான வாழ்வையும்உனக்கே உனக்கான வாழ்வையும்நீயும் , நானும்மனம் கோர்த்துவாழ்ந்து பார்ப்பதுதான்ஆம். ஆம். காதல் ஒரு நாள் கூத்தல்ல ; உள்ளத்தில் பூப்பது ; ஒவ்வோர் நொடியாய் வளர்வது ; உயிரோடு உறைவது..----- சு.பொ.அகத்தியலிங்கம்

No comments: