Friday 7 February 2014

பரவசம் படைத்த பாராட்டு விழா . . .

 03-02-2014 தோழர்".எம்.என்" பணிநிறைவு விழா . . .தருமபுரி மதுராபாய் மண்டபமே  விழாக்கோலம் பூண்டு இருந்தது,எங்கு நோக்கினும் நமது சங்கசெங் கோடி அணிகலனாக அமைந்து இருந்தது.அதிசயம் என்ன வென்றால் 100 க்கு மேற்பட்ட பெண்கள் உட்பட கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட தோழர்கள் தோழியர்கள் திரண்டு இருந்து தோழர்.எம்.என் -க்கு பாராட்டு விழா கொண்டாடினர் .நிகழ்ச்சியில் நமது தமிழ்மாநில தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்.தோழர்.பி . சம்பத்,அவர்களும்,நமது தமிழ் மாநில சங்கத்தின் மாநில செயலர்.தோழர்.எஸ்.செல்லப்பா அவர்களும்,தருமபுரி இடது சாரி தலைவர்களும் ,மற்றும் மாவட்ட,கிளை சங்க நிர்வாகிகளும் மிக மிக திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.நமது மதுரை மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழர்கள் சி .செல்வின் சத்தியராஜ், எஸ்.சூரியன்.,எஸ்.ஜான்போர்ஜியா . ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்..     




 
வாழையடி ...வாழையாக .....
மண்ணில் வேருன்றி 
மா-நிலத்தில் கால்பதித்து 
வீசும் புயல் காற்றை 
வீழும்வரை நின்றேதிர்ப்பேன் ...
நின்ரெதிர்த்து முடிவினிலே 
வீழும் நிலை  வந்துவிட்டால்  . . .
என் கன்ரெதிர்க்கும்,
என்கன்றின்,கன்ரெதிர்க்கும் 
கன்றுகளின் கன்ரெதிர்க்கும் . . . 
என்கிற வரிகளுக்கு இணங்க
வாழையடி...வாழையாக ....
தோழர்."எம்.என்" பணி தொடரும்.... 

No comments: