Wednesday 26 February 2014

தொலைபேசி ஊழியர்கள் BSNLEU & TNTCWU ஆர்ப்பாட்டம்...

புதுக்கோட்டை-பிப்.27. புதுக்கோட்டையில் உள்ள தொலைபேசித்துறை BSNLEU & TNTCWU ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
      ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு BSNLEU ஊழியர்சங்கக் கிளைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.  விடுபட்ட தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப் படுத்தவேண்டும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு அரசு உத்தரவின்படி குறைந்தபட்ச ஊதியம், சமவேலைக்குச் சமஊதியம், அடையாள அட்டை வழங்குதல், தரத்தின்படி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு கூடுதல் ஊதியம் வங்கிக்கணக்கு-காசோலை மூலமாக உரிய காலத்தில் சம்பளப்பட்டுவாடா, ஒப்பந்தக்காரர் மாறினாலும் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியான பணி, ஆகிய பதினோரு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.


      தொலை பேசித்துறை BSNLEU ஊழியர் சங்க மாவட்டத் துணைத்தலைவர் மல்லிகா கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். தொடர்ந்து, ஒப்பந்த ஊழியர்சங்க TNTCWU மாவட்டச் செயற்குழு உறுப்பினர் விசுவநாதன்,  பாலமுருகன், ஜேக்கப்ஜான்சன் மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு வாழ்த்திப்பேசினர்.
முன்னதாக BSNL ஊழியர்சங்கக் கிளைச் செயலர் ஆறுமுகம் வரவேற்றார். ஒப்பந்த்த் தொழிலாளர் TNTCWU சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் கல்லடியான் நன்றி கூறினார். போராட்ட வாழ்த்துக்களுடன் எஸ்.சூரியன்.

No comments: