Saturday, 31 October 2015

கொலைகாரர்களின் நாடல்ல இந்தியா! சென்னை பிரகடன வெளியீட்டில் எழுத்தாளர்கள் முழக்கம்...

இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் கருத்துரிமைக்கானசுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒருபோதும் இருந்திராத அளவு மதரீதியாக தேசத்தைப் பிளவுபடுத்துகிற பேச்சுக்களும் வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு,மதம் சார்ந்த அடையாள அரசியலின் கீழ் ஒட்டுமொத்த தேசத்தையும் கொண்டுவர நடக்கும் முயற்சிகள் குறித்து எங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத் துகிறோம் பன்முகப்பண்பாடுகளின் கலவை யாகத் திகழும் இந்திய மக்களை ஒற்றை அடையாளம் என்னும் பட்டிக்குள் தள்ளுகிற முயற்சியின் காரணமாக சிறுபான்மை மக்களை அந்நியர்களாகவும் இந்தியப் பண்பாட்டின் விரோதிகளாகவும் சித்தரிக்கும் போக்கு அபாயகரமான எல்லைக்கு வளர்ந்திருப்பதையும்; மதவாதக் கருத்துகள் சாதியரீதியான வன்முறைகளை ஊக்குவிப்பதால் தலித்துகள்மீதான தாக்குதல்கள் நாடெங்கும் அதிகரித்து வருவதையும் கவலையோடு சுட்டிக்காட்டுகிறோம்.
எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி,பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர்,கோவிந்த் பன்சாரே ஆகியோர் திட்டமிட்ட முறையில் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வுகள் நாட்டிலுள்ள சுயசிந்தனையாளர்கள் அனைவருக்குமான அச்சுறுத்தல் என்பதை கவனப்படுத்துகிறோம். வகுப்புவாத வன்முறைகளுக்கு எதிராகவும் கருத்துரிமைக்கு ஆதரவாகவும், மத்திய அளவிலும் மாநில அளவிலும், தங்கள் விருதுகளையும் பொறுப்புகளையும் துறந்து நாட்டின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பியுள்ள இந்தியப் படைப்பாளிகளுக்கு எங்கள் மனப்பூர்வமான ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்கிறோம்.இந்திய அளவில் எழுத்தாளர்களும் கலைஞர்களும் இன்று சகிப்பின்மைக்கு எதிராக மேற்கொண்டுள்ள போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் விலகி நிற்கவில்லை என்பதை இந்தப் பிரகடனத்தின் மூலம் அறிவிக்கிறோம்
கருத்து சுதந்திரத்துக்காக உறுதியுடன் நிற்கும் அதே நேரத்தில் மக்கள் மத்தியில் பகைமையை விதைக்கும் வெறுப்புப் பேச்சுக்களும் பிரச்சாரங்களும் தடை செய்யப்படவேண்டும் எனக்கோருகிறோம்.இந்திய சமூகத்தின் அடித்தளமாகத் திகழும் மதச்சார்பின்மை, ஜனநாயகம்,பன்முகப் பண்பாடு ஆகியவற்றுக்கு எதிராக திட்டமிட்டமுறையில் தாக்குதல் தொடுக்கிற நபர்கள், பேச்சுகள் அறிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து இடம் கொடுப்பது சரிதானா என்கிற கேள்வியை ஊடகங்களின் முன்னால் வைக்கிறோம்.வரலாற்றின் இடத்தில் புராணங்களையும் பகுத்தறிவின் இடத்தில் மூட நம்பிக்கைகளையும் எழுதுகோலுக்கு எதிராக கடப்பாரையையும் துப்பாக்கியையும் வைக்கிற சங் பரிவாரங்களின் அனைத்து முயற்சிகளையும் நிராகரிக்க வேண்டும் என்கிற வேண்டுகோளைத் தமிழ்ச்சமூகத்தின் முன் வைக்கிறோம்ர எல்லாவிதமான மத நம்பிக்கையாளர்களும் பகுத்தறிவாளர்களும் கருத்து ரீதியாக முரண்படும் சுதந்திரத்தோடு சக வாழ்வு வாழ்ந்து வரும் இந்த நாட்டின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்கிற எங்களின் ஆழ்ந்த விழைவை மக்களின் முன்னால் வைக்கிறோம்ர அவரவர் உணவு முறை,உடை, வாழ்க்கை முறைக்கான உரிமைக்காக கூட்டாகக் குரல் எழுப்புவோம்ர எவ்விதமான அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் சுதந்திரத்துக்கும், பன்முகப்பண்பாட்டுக்கும் வலு சேர்க்கும் எங்கள் படைப்புகளை உறுதியுடன் தொடர்ந்து படைத்து மக்கள் முன் வைக்கிற எங்கள் பயணத்தை இன்னும் வலுவாக முன்னெடுப்போம் என உறுதியான குரலில் பிரகடனம் செய்கிறோம். சென்னையில் வியாழனன்று (அக். 29) ‘சரிநிகர்சார்பில் நடைபெற்ற எழுத்தாளர்கள் சந்திப்பில் இப்பிரகடனம்வெளியிடப்பட்டது.இந்தப் பிரகடனத்தில் இந்திரா பார்த்தசாரதி, திலகவதி, இமையம், பிரபஞ்சன், கோணங்கி, பெ. மணியரசன், விஜயசங்கர், மங்கை, ஜீவசுந்தரி பாலன், ரேவதி, ரோகிணி, பிரசன்னா ராமசாமி, இரா.தெ. முத்து, ஆழி செந்தில்நாதன், பா. செயப்பிரகாசம், அகிலன் கண்ணன், மயிலை பாலு, நா.வே. அருள், அருண்மொழி, .கு. ராஜன், .சீ. சிவகுமார், பாஸ்கர் சக்தி, பி. லெனின் உள்ளிட்ட பல படைப்பாளிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

Friday, 30 October 2015

மத்திய சங்க செய்திகள் - மாநில சங்க சுற்றறிக்கை...

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU மத்திய சங்கம் செயல் பாடுகள் குறித்த தகவலை வெளியிடப்பட்டுள்ள  செய்திகளை  -  நமது தமிழ் மாநில சங்கம்  சுற்றறிக்கையாக தந்துள்ளதை ... காண இங்கே கிளிக் செய்யவும்.

31.10.15 பனி நிறைவு பாராட்டு . . .வாழ்த்துக்கள் . . .

அருமைத் தோழர்களே ! 2015 -அக்டோபர் (31.10.15) இம் மாதம் நமது மதுரை தொலை தொடர்பு மாவட்டத்தில் பனி நிறைவு பெறும் தோழர்களுக்கு ஒருங்கிணைந்த பனி நிறைவு பாராட்டு விழா 31.10.15 காலை 11 மணிக்கு மதுரை பொது மேலாளர் அலுவலக மனமகிழ் மன்றத்தில் நடை  பெற உள்ளது அனைவருக்கும் நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் மனபூர்வமான  . . .வாழ்த்துக்கள் . . .உரித்தாகட்டும் 

1. C.  செல்லசாமி , TM - TMM
2. K.  கோவிந்தன் , TM - VLM 
3. T.  நாகேந்திரன் , TM - TRPLI
4. M.  பரமன் , TM - USP
5. P. தண்டாயுதபாணி , STS -ELLIS
6. P.  வெள்ளிமலை  , TM - DDG
7. P . விருமாண்டி , TM - TKM 

OCT- 30 சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்கம் அவர்கள் நினைவு நாள் . .

முத்துராமலிங்கதேவர், 1908_ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30_ந்தேதி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னை அடுத்த புளிச்சுகுளம் என்ற கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் உக்கிரபாண்டியத் தேவர் _ இந்திராணி அம்மாள்பிறந்த ஆறாவது மாதத்திலேயே தாயாரை இழந்த தேவர், பாட்டியின் ஆதரவில் வளர்ந்தார். 1927_ம் ஆண்டில் முத்து ராமலிங்க தேவர் காங்கிரசில் சேர்ந்தார். சுதந்திரப் போராட் டத்தில் கலந்துகொண்டு, சிறை சென்றார். வெள்ளைக் காரர்களை எதிர்த்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படை திரட்டியபோது, அவருக்கு ஆதர வாக தீவிர பிரசாரம் செய்தார்.அப்போது 5 ஆண்டு ஜெயில் தண்டனை அடைந்தார். 1948_ம் ஆண்டில், காங்கிரசை விட்டு விலகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துவக்கிய பார்வர்டு "பிளாக்" கட்சியில் சேர்ந்தார். முத்துராமலிங்க தேவர், நீண்ட காலம் சட்டசபை உறுப்பினராக இருந்திருக்கிறார். 1937_ம் ஆண்டு முதுகுளத்தூர் தொகுதியில் இருந்து தமிழ் நாடு சட்டசபைக்கு காங்கிரஸ் சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டார். பிறகு 1947_ம் ஆண்டு மீண்டும் தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.1952_ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் சட்டசபைக்கும், பாராளுமன்றத்துக்கும் (2 தொகுதிகளில்) காங்கிரசை எதிர்த்து போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி கிடைத்தது. அதில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.பிறகு 1957_ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்நாடு சட்டசபைக்கு முதுகுளத்தூர் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்று, சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.கடந்த 1962 பிப்ரவரி மாதம் நடந்த பொதுத்தேர்தலில், அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். நேதாஜியும், முத்துராமலிங்க தேவரும் சகோதர பாசம் கொண்டிருந்தனர். 1939_ம் ஆண்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக நேதாஜி தேர்ந்து எடுக்கப்பட்டபோது, அவர் வெற்றிக்கு தேவர் உழைத்தார். 
கல்கத்தாவில் நடந்த விழாவுக்கு, தேவரை நேதாஜி அழைத்தார். "முத்து ராமலிங்கம், என் தம்பி" என்று கூட்டத்தினருக்கு அறிமுகம் செய்தார். தேவரைக் கட்டித்தழுவி, "நான் வடநாட்டு போஸ்; நீ தென்நாட்டு போஸ்" என்று வாழ்த்தினார். 1957 செப்டம்பர் மாதத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடையே கலவரம் நடந்தது.அப்போது ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த இமானுவேல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், முத்துராமலிங்கதேவரும் குற்றம்சாட்டப்பட்டார். முடிவில், நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார். பத்தாம் வகுப்பு வரை படித்த தேவர், ஆங்கிலத்திலும், தமிழிலும் மணிக்கணக்கில் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவர்.தமிழ் நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். விடுதலைப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றார். அவர் வாழ்ந்த நாட்கள் 20,075. அதில் சிறையில் கழித்த நாட்கள் 4,000. ஜமீன் பரம்பரையில் பிறந்தாலும், எளிய வாழ்க்கை நடத்தினார்33 கிராமங்களுக்கு சொந்தக்காரர் என்றாலும், வருமானத்தில் பெரும் பகுதியை ஏழை மக்களுக்காக செலவிட்டார். பொதுத்தொண்டு செய்வதை முழு நேரப்பணியாக மேற்கொள்ள விரும்பி திருமணம் செய்து கொள்ளாமல் துறவிபோல் வாழ்ந்தார்.

30.10.2015 மதுரை தோழர்.பி.மோகன் நினைவுநாள்...


அருமைத் தோழர்களே ! 30.10.2015 மதுரை பாராளுமன்ற உறுப்பினர்  தோழர். பி.மோகன் அவர்களின் நினைவுநாள். மதுரை மக்களின் அனைவரது அன்பை பெற்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தோழர்.P.மோகன் என்று சொன்னால் எந்த அரசியல் கட்சிகளுக்கும், எந்த சாதி, மதம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவராக மதுரையை வளம் வந்த பெருமைமிகு தோழர்.பி.மோகன் ஆவார். 
மதுரை மண்ணின் மைந்தராக அனைவரயும் பெயர் சொல்லி அழைக்க கூடிய அளவில் மக்களோடு இரண்டற கலந்த தலைவன் தோழர்.P.மோகன் ஆகும்.நமது பகுதியில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்கு ஆதரவளித்து, வாழ்த்திய அன்புத்தலைவர் அவர். எந்த பகுதி ஊழியர்கள், மக்கள் போராடினாலும் அங்கு ஓடோடி வந்து குரல் கொடுத்த தலைவன். மதுரை மக்களின் முன்னேற்றத்திற்காக, அரசு மருத்துவமனை முன்னேற்றம் போன்றவற்றில் தனிக்கவனம் செலுத்திய மக்கள் தலைவர். செம்மொழிக்காக நாடாளுமன்றத்தில் ஓங்கி குரல் கொடுத்த உத்தமர் தோழர்.P.மோகன் ஆகும்.பாராளுமன்ற ஒதிக்கீடு நிதிதனை மக்கள் நலத் திட்டங்களுக்காகவே முழுக்க முழுக்க முன் நின்று பணியாற்றிய பண்பாளர்.மாணவ பருவம் முதற் கொண்டு இறுதிவரை தான் கொண்ட மார்க்சிய கொள்கையில் உறுதியாக நின்ற உயர்ந்த மனிதர் தோழர்.P.மோகன்  2009 ஆம் ஆண்டு-அக்டோபர் 30   நம்மை விட்டுப் பிரிந்த அன்புத் தலைவன் தோழர். மோகன்  மறைந்து இன்றோடு  6 ஆண்டுகள் உருண் டோடி  விட்டது. உழைப்பாளி வர்க்கத்திற்காக தனது இந் நுயிரை ஈந்த அந்த தலைவன் விட்டுச் சென்ற பணிகளை நாம் தொடர்ந்து போராடி வெல்வோம் என இந் நாளில் சபதம் ஏற்போம்.

--- என்றும் நினைவுடன் அன்புத் தோழன்.எஸ்.சூரியன்,D/S-BSNLEU.