தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்7 வயதிலேயே அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து களம் இறங்கிய மாவீரர்.14 வயதில் பிரிட்டிஷ் ராணுவத்தின் துப்பாக்கிக் குண்டை எதிர்கொண்டு மூவர்ணக் கொடியை ஏற்றியவர். இதனால் ஓராண்டு சிறைவாசத்தை ஏற்றுக் கொண்டவர்.பத்தாண்டுகள் சிறைவாசம், நான்காண்டுகள் தலைமறைவு வாழ்க்கை என அவருடைய வரலாறு முழுவதும் தியாகத்தால் எழுதப்பட்டது. திருமணமான நாளன்றே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.
1947ல் தேசப் பிரிவினையின்போது மக்கள் ஒற்றுமைக்காக பாடுபட்ட களப்போராளி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய நவரத்தினங்களில் ஒருவர். காலிஸ்தான் உள்ளிட்ட பிரிவினைவாத இயக்கங்களை பின்னுக்குத் தள்ளியவர். மதச்சார்பின்மையை பாதுகாக்க வியூகம் வகுத்து மதவெறி சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த தீரர். கூட்டணி அரசியல் சகாப்தத்தின் மையப்புள்ளியாக திகழ்ந்தவர். விடுதலையை விலைபேசுவோர் அதிகாரத்திலிருக்கும் காலமிது. ஒன்றுபட்ட, மதச்சார்பற்ற இந்தியாவை பாதுகாக்க போராடிய மகத்தான தலைவரை இந்நாளில் நெஞ்சில் நிறுத்துவோம்!
No comments:
Post a Comment