Friday, 26 August 2016

26-08-16 செப்-2, வேலைநிறுத்த பிரச்சாரம்5-ம் நாள்.

அருமைத் தோழர்களே ! செப்-2, அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தி ற்கான பிரச்சார பயணம் நமது மதுரை மாவட்ட சங்கத்தின் சார்பாக 5-ம் நாள் 26-08-16 காலை கொடைக்கானலில் துவங்கியது. இப்பயணத்தில் நமது மாவட்டத்தலைவர் தோழர்.எ. பிச்சைக்கண்ணு, மாவட்டசெயலர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் இருவரும் பங்கேற்றனர்...
அதன்பின் வத்தலக்குண்டு தொலைபேசியக்கத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த விளக்க கூட்டத்திற்கு கிளைத் தலைவர் தோழர்.கே. மகாராஜன் தலைமை வகுத்தார். கிளை செயலர் தோழர்.கே. சின்னையன் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர்கள், எ. பிச்சிக்கண்ணு, சி. செல்வின் சத்திய ராஜ்  ஆகிய  இருவரும் சிறப்புரை நிகழ்த்தினார்கள். தோழர். கே. பழனியாண்டி நன்றியுரை கூறினார்.
அதனை தொடர்ந்து நிலக்கோட்டையில் நடைபெற்ற வேலை  நிறுத்த  விளக்க கூட்டத்திற்கு தோழர்.ஜே. சாலமோன் தலைமை தாங்கினார். கிளைச்செயலர் தோழியர்ஸ்டெல்லா,வரவேற்புரைநிகழ்த்தினார்தோழர்கள், எ. பிச்சிக்கண்ணு, சி. செல்வின் சத்திய ராஜ்  ஆகிய  இருவரும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.. தோழர்.பி. மலைச்சாமி நன்றி கூற நிகழ்சசி இனிதே நிறைவுற்றது.

No comments: