வரலாற்றில் இன்று - தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை
1639-ம் ஆண்டு இதேநாளில் தான் உருவானது. கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன், செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினர்.
அந்த இடத்தை விற்ற வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகியோர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. ஜார்ஜ் டவுன் மற்றும் பார்க் டவுன் ஆகிய பகுதிகளே பூர்வீகமான ஒரிஜினல் சென்னை ஆகும். தமிழக மக்கள் அப்பகுதியை "டவுன்" என்றும் "பட்டணம்" என்றும் அழைத்தனர்.. இன்று அப்பகுதி வட சென்னை என்று அறியப்படுகிறது. ஆங்கிலேயர்கள் இம்மாநகரை மெட்ராஸ் என்று அழைத்தனர். மெட்ராஸ் மாநகரத்தின் பெயர் 1996–ம் ஆண்டு சென்னை என மாற்றம் செய்யப்பட்டது
காலக் கிராமத்தில் இதர பகுதிகள் ஒவ்வொன்றாக சென்னை நகருடன் இணையப்பெற்றன. இன்று சென்னை மாநகரம் புகழ்பெற்ற கோவில்கள், நட்சத்திர ஓட்டல்கள், தொழில்நுட்ப பூங்காக்கள், பொழுது போக்குவதற்காக தியேட்டர்களுடன் கூடிய ஷாப்பிங் மால்கள் என புதுப்பொலிவுடனும் இளமையுடன் தலை நிமிர்ந்து நிற்கிறது

No comments:
Post a Comment