Tuesday, 9 August 2016

ரியோ ஒலிம்பிக் 2016 - சாதனை படைத்தார் தீபா...


 ரியோ ஒலிம்பிக்கில் சாதனை படைத்தார் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை தீபா கர்மாகர். ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்தியர் ஒருவர் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இது முதல் முறையாகும். மட்டுமல்லாமல் ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண்மணியும் தீபா கர்மாகர்தான் என்பது கூடுதல் சிறப்பாகும். ஜிம்னாஸ்டிக்ஸ் வோல்ட் பிரிவில் இவர் இச்சாதனையைப் புரிந்துள்ளார்.ஆர்டிக்ஸிடிக்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் வோல்ட், ஆன் ஈவன் பார், பாலன்ஸ் பீம், ப்ளோர் எக்ஸசைஸ் ஆகிய பிரிவுகளில் தீபா கர்மாகர் போட்டியிட்டார். இதில் வோல்ட் தவிர பிற பிரிவுகளில் சிறப்பாக செயல்பட தீபா கர்மாகரால் இயலவில்லை.இவர் ஒட்டுமொத்த செயல்பாட்டில் 51வது இடத்தைப் பிடித்தார்.தகுதிச் சுற்றில் மொத்தம் 8 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள் என்ற நிலையில் 8வது நபராக தீபா இடம் பெற்றார். முதலில் 6 மற்றும் 7வது இடங்களில் இருந்த தீபா கர்மாகர்இறுதியாக 8வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இருந்தபோதிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இவர் சாதனை படைத்துள்ளார்.இறுதிப் போட்டி ஆகஸ்ட் 14அன்றுநடைபெறும்.52 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர் ஒருவர் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்றது இதுவே முதல் முறையாகும். 1964ம் ஆண்டு இந்தியா ஜிம்னாஸ்டிக்ஸ் ஆண்கள் பிரிவில் தகுதி பெற்றிருந்தது.

No comments: