Tuesday, 9 August 2016

மதுரை - TKMலிருந்து - பீபீகுளம் G.M (O) வரை பேரணி...

அருமைத் தோழர்களே ! நமது BSNL  இன்முகத்துடன் சேவையை  மக்கள் மத்தியில் பிரபல படுத்துவதற்காக எதிர்வரும் 10.08.16 புதன் கிழமை காலை 10 மணிக்கு மதுரை - TKMலிருந்து - பீபீகுளம் G.M (O) வரை பேரணி...நடைபெறும் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம்.   நமது பேரணி பொது மேலாளர் திருமதி . S.E.ராஜம், ITS  அவர்கள் தலைமையில் நடைபெறும் , பேரணியை துவக்கி வைக்க மரியாதை க்குரிய மதுரை ஆட்சி தலைவர் இசைவு தந்துள்ளார்....
நமது மதுரை மாவட்ட FORUM சார்பாக நடைபெறும் இந்நிகழ்விற்கு வந்தவர்களை வரவேற்று FORUM கன்வீனர் எஸ். சூரியன் உரை நிகழ்த்துவார். நமது மாநில FORUM முடிவுப்படி BSNLEU மாநில சங்கத்தின் சார்பாக தோழியர் . P. இந்திரா அவர்களும், SNEA சார்பாக தோழர். S. பாலசுப்ரமணியன் அவர்களும், AIBSNLEA சார்பாக தோழர். C. துரையரசன் அவர்களும், AIBSNLOA சார்பாக தோழர். S. பாலமுருகன் அவர்களும் பேரணியில் சிறப்புரை நிகழ்த்துவார்கள்....அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம். என்றும் தோழமையுடன், 
            எஸ். சூரியன்., எஸ். நாகராஜ், என். சீனிவாசகன், ஆர். முருகன்.

No comments: