Sunday 14 August 2016

ஆகஸ்ட் 15 அனுபவப் பாடம் . . .

தனி மனிதனுக்கு ஆடை
தாய் மண்ணுக்குச்சுதந்திரம்  
அத்தியாவசியத் தேவை அறிக.

வாங்கி வந்ததல்ல இந்திய சுதந்திரம் 
பொங்கி எழுந்ததனால் பெற்றது 
புரிந்து வினை புரிக.

சுதந்திரப் பூ மகரந்தங்களை மட்டுமல்ல
கந்தகங்களையும் சுமந்தது காண்க
காந்தியடிகள் கைத்தடி
பகத்சிங்கின் தொப்பி
வெவ்வேறு குரலில் விடுதலை கேட்டாலும் 
மக்களை ஈர்த்தவை மனதில் கொள்க.

மதவெறியில் சிவந்த கண்களுக்கு மருந்து
அண்ணலின் கண்ணாடி
நடுங்கும் கால்களுக்கு நம்பிக்கை
பயகத் மீசை
பிரிக்க நினைப்போர் தோற்க உழை.

இன்குலாப் ஜிந்தாபாத் வீரத்தின் முழக்கம் 
ரகுபதி ராகவ ஒற்றுமை கீதம் 
எல்லா நாக்குகளும் இப்போதும் எதிரொலிக்க

காவி வெள்ளை பச்சை சேர்ந்திருந்தால்
கம்பீரமாய்ப் பறக்கும் காற்றில் நம் கொடி
இந்து முஸ்லிம் கிறிஸ்துவர்கள்
இன்னும் உள்ள நம்மவர்கள்
இணைந்து உழைத்தால் வெல்வோம் பாடம் படி

No comments: