Thursday, 25 August 2016

25-08-16 செப்-2, வேலைநிறுத்த பிரச்சாரம் 4-ம் நாள்.

அருமைத் தோழர்களே !  செப்-2, வேலைநிறுத்த பிரச்சாரம் 4-ம் நாளாக நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் சார்பாக, 25-08-16 காலை சின்னாளபட்டியில்  துவங்கி, கன்னிவாடி, பழனி, ஓட்டன்சத்திரம் ஆகிய ஊர்களில் ஊழியர்களை  சந்தித்தித்து விட்டு பழனியில் நடைபெற்ற போராட்ட விளக்க கூட்டத்திற்கு பழனி கிளைத்தலைவர் தோழர். ஜே. சாது சிலுவைமணி தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் தோழர் எ. பிச்சைக்கண்ணு, மாவட்டசெயலர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் இருவரும் உரைநிகழ்த்தினர். கிளை செயலர் தோழர். அன்பழகன் நன்றிகூறினார்.. . . . .
திண்டுக்கல்லில் நடைபெற்ற போராட்ட விளக்க கூட்டத்திற்கு கிளைத்தலைவர் தோழியர். எஸ். சுமதி தலைமை தாங்கினார். கிளை செயலர் தோழர்.கே.எஸ். ஆரோக்கியம் வரவேற்புரை நிகழ்த்தினார். செப்-2, போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி மாவட்டத்தலைவர் தோழர். எ. பிச்சைக்கண்ணு, மாநில துணைத் தலைவர் தோழர். எஸ். ஜான் போர்ஜியா, முன்னாள் மாவட்ட செயலர் தோழர். எஸ். சூரியன், மாவட்ட அமைப்புச் செயலர் தோழர். கே.என். செல்வன், மாவட்ட செயலர் தோழர். சி. செல்வின் சத்தியராஜ் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இறுதியாக கிளைப்பொருளர் தோழர். பாக்யராஜ் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். இப்பிரச்சார பயணத்தில் மேலும் தோழர்கள், வைத்திலிங்க பூபதி, அய்யனார்சாமி, பழனிக்குமார், விஜயக்குமார் ஆகிய மாவட்ட சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

No comments: