அருமைத் தோழர்களே ! மத்தியில் உள்ள பாஜக அரசு, தொடர்ந்து மக்கள் சொத்தான BSNL-MTNL உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மய படுத்துவதற்கான முயற்சியை செய்து வருகிறது. BSNL நிறுவனத்தை பாதுகாக்க மக்கள் மத்தியில் கோடிக்கணக்கில் கையெழுத்தை பெற்று பிரதமரிடம் வழங்கி இருக்கின்றோம். தர்ணா நடத்தி இருக்கின்றோம். வேலை நிறுத்தம் செய்து இருக்கின்றோம், ஆனாலும் மத்திய சர்க்கார் தனது தவறான போக்கை மாற்றிக்கொண்டதாக இல்லை, கடந்த 20-07-16 அன்று மத்திய அரசின் "நித்தியாயக்" என்ற அமைப்பு BSNL-MTNL பொதுத்துறை நிறுவனங்களை தனியார் படுத்தப்படும் திட்டத்தை அறிவித்தது. எனவே, நமது அகில இந்திய FORUM , மத்திய அரசின் தவறான கொள்கைக்கு எதிரான ஆர்ப்பாட்ட அரை கூவலை அறிவித்தது....
அதனடிப்படையில் இந்தியா முழுவதும் 3-8-16 நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக நமது மதுரை மாவட்டத்தில் மதுரை பொதுமேலாளர் அலுவலகத்திலும், திண்டுக்கல் தொலைபேசியக்கத்திலும் மிக சக்தியான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. . . . .
திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு SNEA சந்திரகுமார் தலைமை தாங்கினார். SNEA கிளை செயலர் தோழியர் சுசீலா மேரி , BSNLEU கிளச் செயலர் தோழர். K.S. ஆரோக்கியம் , BSNLEU மாநில துணைத் தலைவர் தோழர்.S. ஜான் போர்ஜியா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினர். 5 பெண்கள் உட்பட 60 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு கூட்டு தலைமையாக தோழர்கள், சி. செல்வின் சத்தியராஜ்-BSNLEU, தோழர். விஜயகுமார் SNEA, தோழர். அருணாசலம் AIBSNLEA ஆகியோர் பொறுப்பேற்று உரை நிகழ்த்தினார் . SNEA மாவட்ட செயலர் தோழர் . நாகராஜ் , மற்றும் BSNLEU மாவட்ட செயலர் தோழர் . எஸ். சூரியன் இருவரும் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையை விளக்கி உரை நிகழ்த்தினர். 30 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment