அருமைத் தோழர்களே ! 24 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய அறைகூவலுக்கு இணங்க 17-08-16 அன்று மதுரை GM (O)-ல் நமது BSNLEU மதுரை மாவட்ட தலைவர் தோழர் A. பிச்சை கண்ணு அவர்கள் தலைமையில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடந்தது ... ஆர்ப்பாட்டத்தில் 45 பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தோழர்கள் GKVயும் , K. பழனிக்குமாரும் கோரிக்கைகள் அடங்கிய கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தை மாநில துணைத் தலைவர் தோழர்.S. ஜான் போர்ஜியா துவக்கிவைத்து உரையாற்றினார். அதன்பின் முன்னாள் மாவட்ட செயலர் தோழர். S. சூரியன் கோரிக்கையை விளக்கி பேசினார். தொடர்ந்து ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர். N. சோணைமுத்து உரையாற்றினார். நிறைவுரையாக மாவட்ட செயலர் தோழர். C. செல்வின் சத்தியராஜ் கோரிக்கைகளின் நியாயம் குறித்தும் நமது போராட்டம் குறித்தும் உரை நிகழ்த்தினார். இறுதியாக மாவட்ட அமைப்பு செயலர் தோழியர்.V. ராஜேந்திரி நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.
திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் தோழியர் எஸ். சுமதி தலைமை வகுத்து உரைநிகழ்த்தினார் அதன்பின் முன்னாள் மாவட்ட சங்க நிர்வாகி தோழர். எஸ். பரிமள ரெங்கராஜ், கிளை செயலர் தோழர்.K.S. ஆரோக்கியம் , ஒப்பந்த ஊழியர் சங்க நிர்வாகி தோழர்.சக்திவேல் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினார் . ஆர்ப்பாட்டத்தில் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment