ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர். அவர் ஒரு கவிஞர், தத்துவஞானி, இசையமைப்பாளர், எழுத்தாளர், மற்றும் ஒரு கல்வியாளரும் கூட.1913ல், அவரது கவிதைத் தொகுப்பான ‘கீதாஞ்சலி’ என்ற படைப்புக்காக, நோபல் பரிசு வென்று, ஆசியாவின் முதல் நோபல் பரிசுக்கான வெற்றி வாகை சூட்டப்பட்டவர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றவர். ஆங்கிலேய அரசரான கிங் ஜார்ஜ்.V அவர்களால் ‘வீரத்திருமகன்’ என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவிய ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், பிரபலமாக ‘குருதேவ்’ என்றும் அழைக்கப்பட்டார். அவரது பிரபலமான இசைதட்டுகள் அனைத்தும் ‘ரவீந்திரசங்கீத்’ என்ற பேரில் அழைக்கப்பட்டன. இவர் இயற்றிய ரவீந்திரசங்கீத் நியதியிலுள்ள இரண்டு பாடல்களான “ஜன கண மன” மற்றும் “அமர் சோனார்”,இந்தியா மற்றும் வங்காளத்தின் தேசிய கீதங்களாக உள்ளது. இந்திய நாட்டு தேசிய கீதத்தை உருவாக்கிய அத்தகைய சிறப்பு வாய்ந்த கவிஞரான ரவீந்திரநாத் தாகூர் பிறந்த நாள் இன்று...
No comments:
Post a Comment