அருமைத் தோழர்களே ! புன்னகையுடன் சேவை (SWAS) இயக்கத்தை முழுமையான வீச்சில் கொண்டு போவதற்கு FORUM சார்பாக மாவட்ட தலைநகரங்களில் ஒரு பேரணியை நடத்தவேண்டும் என்ற அகில இந்திய FORUM முடிவை ஒட்டி 10.08.16 நமது மதுரை மாவட்டத்தில் ஒரு எழுச்சிமிக்க பேரணியை மதுரை மாவட்ட FORUM நடத்தியது .150 க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் உட்பட சுமார் 400 பேர் பேரணியில் பங்கேற்றனர் . நமது பேரணிக்கு நமது பொது மேலாளர் உயர்திரு திருமதி S.E .ராஜம் ,ITS அவர்கள் தலைமை தாங்கினார்கள், வரவேற்புரையை மதுரை மாவட்ட FORUM கன்வீனரும், நமது BSNLEU மாவட்ட செயலருமான தோழர்.S. சூரியன், வந்திருந்த அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். அதன்பின் SNEA-CHQ பொருளர் தோழர்.ராஜன் SWAS திட்டத்தை விளக்கி பேசினார். நமது BSNLEU மாநில உதவிச் செயலர் தோழர் P. இந்திரா பேரணியின் நோக்கம், BSNLநிறுவனத்தின் சேவை குறித்து பேசினார். AIBSNLEA மாநில உதவிச் செயலர் தோழர். துரை அரசன் பேரணியின் நோக்கம் குறித்து பேசினார்.. அதன்பின், மரியாதை க்குரிய மதுரை மாவட்ட ஆட்சியர், உயர்திரு. வீரராகவ ராவ் அவர்கள் BSNL பொதுத்துறையின் அவசியம் குறித்து பேசி, பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தனர். நமது BSNL நிறுவனத்தின் சேவைகளை விளக்கி நமது சேவையை பயன்படுத்தவேண்டிய அவசியம் குறித்து பொது மக்கள் மத்தியில் நாம் கொண்டு சென்ற விஷயம் சிறப்புமிக்கது. .சேவைகளை பற்றி விரிவாக பேரணியில் கோஷம் எழுப்பிய வண்ணம் வந்தனர் ..BSNLEU சங்கத்தின்
அனைத்து கிளை செயலர்கள் ,மாவட்ட சங்க நிர்வாகிகளில் ஓரிருவரை தவிர அனைவரும் பங்கேற்றனர் . பெரும் எண்ணிக்கையில் ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர் . மதுரை தல்லாகுளத்தில் துவங்கிய பேரணி பீபிகுளம் பொது மேலாளர் அலுவலகத்தை சென்றடைந்தது. நமது பொது மேலாளர் அவர்களும், மதுரை மாவட்ட FORUM கன்வீனர் தோழர்.எஸ். சூரியனும் நன்றியுரை கூறி பேரணி கூட்டத்தை நிறைவு செய்தார்கள். மதுரை .மாவட்டத்தின் நிகழ்வுகளில் ஒரு புதிய அத்தியாயம் படைத்த அனைத்து ஊழியர்கள் ,அதிகாரிகள் ,ஒப்பந்த ஊழியர்கள் , ,FORUM அமைப்பின் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.. .
No comments:
Post a Comment