Monday 1 August 2016

வெள்ளம்: பல லட்சம் பேர் பரிதவிப்பு - மீட்புப் பணிகளை துரிதப்படுத்துக!

நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக நாட்டின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில், கடும் மழையால் ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்புகளை அரசியல் தலைமைக்குழு கவலையுடன் பரிசீலித்தது. அசாம் மற்றும் பீகார் மாநிலங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எண்ணற்றோர் உயிரிழந்துள்ளதாகவும், பல லட்சம் மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு புலம்பெயர்ந்து சென்றுள்ளதாகவும், பல்லாயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. பல மாநிலங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாசம்அடைந்துள்ளன. பல மாவட்டங்கள் வெள்ளத் தால் சூழப்பட்டு இதர பகுதிகளுடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளன. மத்திய அரசு, பாதிக்கப்பட்ட மாநிலங்கள் குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, பாதிப்புகளை மதிப்பீடு செய்து, நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக விரைந்து அனுப்பிட வேண்டும். எவ்விதத்தொடர்புமின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக அனுப்பிட முன்னுரிமை அளித்திட வேண்டும்.-


No comments: