Monday, 8 August 2016

AUG - 8,"வெள்ளையனே வெளியேறு' போராட்டம்...

ஆங்கிலேயர்களிடம் இருந்து, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு உப்பு சத்யாகிரகம், ஒத்துழையாமை இயக்கும் உள்ளிட்ட பல்வேறு போரட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் முக்கியமானது "வெள்ளையனே வெளியேறு' போராட்டம். மகாத்மா காந்தி துவக்கிய இப்போராட்டத்தில், லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதன்  நினைவு தினம் இன்று (ஆக.,9ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இப்போராட்டத்தில் ஈடுபட்டு இறந்தவர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இத்தினம்கடைபிடிக்கப்படுகிறது
செய் அல்லது செத்துமடி : 
இந்திய சுதந்திர போராட்டத்தின் போது, மகாத்மா காந்தி துவக்கிய "ஒத்துழையாமை இயக்கத்தை,' பல தலைவர்கள் ஏற்க மறுத்தனர். இதன் பின் ஒரு மாதம் கழித்து, 1942 ஆக.8ம் தேதி, மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் "வெள்ளையனே வெளியேறு' என்ற தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதில் பேசிய மகாத்மா காந்தி, "செய் அல்லது செத்துமடி' என்ற கோஷத்துடன் இப்போராட்டத்தை துவக்கி வைத்தார்இவரது இந்த வாசகம், மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது. ஆக.9ம் தேதி, காந்தி, நேரு, வல்லபாய் படேல் உள்ளிட்ட தலைவர்களை ஆங்கிலேயர் சிறை பிடித்தனர். இருப்பினும் இப்போ ராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்தது. பொதுமக்களும் பெருமளவில் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு பயப்படாமல், மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். அறவழியில் துவங்கிய இப்போராட்டம், வன்முறையாக மாறியது. லட்சக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இது ஆங்கிலேயர்கள் மனதில், இனிமேலும் இந்தியாவை நாம் ஆள முடியாது என உணர வைத்தது. அந்தளவு போராட்டம் தீவிரமாக நடந்தது. இதன் பின், ஐந்து ஆண்டுகள் கழித்து இதே ஆகஸ்ட் மாதம் இந்தியா சுதந்திர நாடாக உருவானது.

No comments: