Saturday, 13 August 2016

எல்லோரும் வியக்கும் வண்ணம் எழுச்சிமிகு மாநாடு...

அருமைத் தோழர்களே ! நமது  BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் 8 வது மாநாடு எல்லோரும் வியக்கும் வண்ணம் எழுச்சிமிகு மாநாடாக 13-08-16 அன்று மிகவும் சீரும் சிறப்புமாக மதுரையில் நடைபெற்றது... தேசிய கொடியை தோழர்.ஆர். சண்முகவேல் ஏற்றிவைத்தார். அதன் பின் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே நமது BSNLU சங்க கொடியை தோழர் எஸ். பரிமள ரெங்கராஜ் ஏற்றிவைத்தார். மாநாட்டில் அஞ்சலியுரையை தோழியர்.எஸ்.சுமதிநிகழ்த்தினார்.வரவேற்புரையைதோழர்.எ.நெடுஞ்செழியன்  நிகழ்த்தினார். மாநாட்டை  தமிழ் மாநிலச்  செயலர்  தோழர்.A . பாபு ராதா கிருஷ்ணன் துவக்கி வைத்து உரைநிகழ்த்தினார்...
மாநாட்டில் ஆண்டறிக்கையை மாவட்ட செயலர். தோழர்.எஸ். சூரியன் அவர்களும், வரவு-செலவு கணக்கை சபையில் மாவட்ட பொருளர் தோழர். எஸ். மாயாண்டியும்    சமர்க்க ப்பட்டு , சில விளக்கங்கள் கோரிப்பெறப்பட்டதற்கு பின்பு  சபையால் ஏற்கப்பட்டது. அதன்பின் தீர்மானங்கள் நிறைவேற்றது.
மதிய உணவு இடைவேளைக்கு பின் அமைப்பு நிலை விவாதம் , ஓரிரு தோழர்களால் விவாதிக்கப்பட்டது. அதன் பின் மூத்த  தோழர் எஸ். பரிமள ரெங்கராஜ் அவர்களுக்கு பணி ஓய்வு பாரட்டவிழா நடத்தி  ஒரு கணையாழி நினைவு பரிசாக மதுரை மாவட்ட சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது.  இதனை தொடர்ந்து   அதன்பின் புதிய மாவட்ட சங்க நிர்வாகிகளின் தேர்வை மாநிலச் செயலர் நடத்திக்கொடுத்தார். மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் ஜான், சந்திரா சேகர் , சுப்பிரமணி,  சாமிகுருநாதன் , ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழா சோணைமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக தோழர்.மாயாண்டி நன்றி கூற  மாநாடு இனிதே நிறைவுற்றது.
 புதிய நிர்வாகிகள் பணி சிறக்க நமது வாழ்த்துக்கள்...எஸ். சூரியன்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

மகிழ்ந்தேன் ஐயா
எனது வாழ்த்துக்களும்