Saturday 31 August 2013

புதிய பென்ஷன் 02.09.13 ஆர்ப்பாட்டம்

02.09.13 புதிய பென்ஷன்- மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் 

ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணையம்  புதிய பென்சன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.அதுதான் ஓய்வூதிய நிதியை கையாளு வதற்கான அறக்கட்டளை வங்கியையும், பதிவேடுகள் காப்பக நிறுவனத்தையும், அமலாக்க அறக்கட்டளையையும், ஓய்வூதிய நிதி நிர்வாக அமைப்புகளையும் , பென்சன் வழங்கும்  கம்பெனிகளையும் நியமித்து செயல்படுத்துகிறது.
நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து அந்த ஆணையத்தையும் புதிய பென்சன் திட்டத்தையும் சட்டப்பூர்வ மாக்கிவிடலாம்என்றுகாங்கிரஸ்ஐ.மு.கூட்டணி அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், அவசரச் சட்டம் காலாவதியாகும் முன் ஒரு மசோதா கொண்டுவர முடியவில்லை. 2005 மார்ச்சில் நாடாளுமன்றத்தில்ஓய்வூதிய நிதி ஒழுங்கு படுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2005” என்பதை அறிமுகப்படுத்தியது. இடது சாரிகளின் எதிர்ப்பால் அந்த மசோதா 14வது நாடாளுமன்றம் முடியும்வரை சட்டமாக நிறை வேற்ற முடியவில்லை. அந்த மசோதாவும் காலாவதியாகிவிட்டது.
நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு 3 திருத்தங்களை  முன்வைத்தது.
1. ஓய்வூதிய நிதியிலிருந்து முக்கிய தே வைகளுக்கு பணம் எடுக்க வழிவகை செய்ய வேண்டும்
2. ஓய்வூதிய நிதி நிர்வாக நிறுவனங்கள் குறைந்தபட்ச லாபத்தை உத்தரவாதம் செய்ய வேண்டும்.
3. மசோதாவில் ஓய்வூதிய நிதி கம்பெனி களுக்கு அந்நிய மூலதனம் வரலாம் என்றும் அது எந்த அளவு வரலாம் என்பது இன்சூர ன்ஸ் திருத்த மசோதாவில் இருக்கும் உச்ச வரம்பைப் பொருத்திருக்கும் என்று கூறப் பட்டுள்ளது.இதன்படிஉடனடியாக26சதவீதம் வரலாம். அதற்கு ஏற்கனவே சட்டம் உள்ளது. திருத்த மசோதா 49 சதவீதத்தை இப்போது பிறப் பித்துள்ளது. சட்டம் நிறைவேறினால் ஓய் வூதிய நிதிக் கம்பெனிகளிலும் அந்நிய மூல தனம் 49 சதவீதம் வரலாம். நாளைக்கு 74 சத வீதம், 100 சதவீதம் என்று அந்த சட்டம் திருத் தப்பட்டால் அதுவும் இதற்குப் பொருந்தும்.
1. ஊழியரின் பங்கிலிருந்து 25 சதவீதம் வரை கடன் பெறலாம். அரசின் பங்கில் கடன் கோர முடியாது. எதற்காக, எத்தனைமுறை, எவ்வ ளவு வரை கடன் பெறலாம் என்பதை ஆணை யம் முடிவு செய்யும்.2. மசோதாவுக்குள்ளேயே ஓய்வூதிய நிதி கம்பெனிகளில் அந்நிய மூலதனம் 26 சதம் வரை வரலாம் என்று சேர்க்கப்படும்.
இன்சூரன்ஸ் திருத்த மசோதா அந்த உச்ச வரம்பை 49 சதவீதமாக்க ஆகஸ்ட் 14 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக என்று முன்வைக்கப்பட்டது. பட்டியலில் இருந்தது.ஆனால், அரசியல் மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர் எதிர்ப்பால் அது பின் வாங்கப்பட்டது. சிதம்பரம் கருத்தொற்றுமை இல்லாததால் பின்வாங்கப்பட்டதாகவும் கருத்தொற்றுமை ஏற்பட்டால் நாளையே நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.
PFRDAமசோதா 19.8.2013 அன்று முதல் தினந்தோறும் பட்டியலில் வைக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றம் பல காரணங் களால் முடங்கி நேரமின்றி நிறைவேற்றப் படாமல் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.30.8.2013 வரைதான் நாடாளுமன்றக் கூட் டத்தொடர். இரு கட்சிகளும் விவாதத்தைத் தவிர்க்க நாடாளுமன்றத்தை முடக்கி சதி செய்துவிட்டு கடைசியில் குரல் வாக்கெடுப் பில் நிறைவேற்ற சதி செய்கிறார்களா என்பது பரிசீலனைக்குரியது.பாஜகவின் திருத்தங்களை ஏற்றாலும் மசோதா சட்டமானால் புதிய பென்சன் திட்டம் ஒழியாது. திருத்தங்கள் புதிய பென்சன் திட் டத்தை ஒழித்து பழைய பென்சனை கொண்டு வரும் நோக்கில் இல்லை என்பதை புரிந்து கொண்டால் பாஜகவும் காங்கிரசும் ஒண்ணு உழைப்பவன் வாயில் மண்ணு என்பதை புரிந்துகொள்ளலாம்.
ஓய்வூதிய நிதி நிர்வாக நிறுவனங்களும் அறக்கட்டளை வங்கியும் தனியாரானால், பின் அந்நிய மூலதனமும் வந்தால் வெனிசுலாவில் ஓய்வூதிய நிதியை எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளையடித்தது போல போய்விடும்.
பங்குச்சந்தையில் மூல தனமிடவே பணமிருக்காது.மேற்கு வங்கம், திரிபுரா தவிர அனைத்து மாநிலங்களிலும் புதிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்டது. இடதுசாரிகள் மேற்குவங்கம் கேரளா, திரிபுரா அரசில் இருந்த போது தடுத்துவைத்தனர். கேரளாவில் 1.4.2013 முதல் புதிய பென்சன் திட்டம் அமலாகிறது. அந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் கூட செய்துவிட்டனர்.ஆணைய தலைவரின் கூற்றுப்படி இந்தி யாவில் இதுவரை 53 லட்சம் பேர் இந்த திட் டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
.நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிதி அமைச்சர் கொடுத்த ஒருபதிலில் 2012-13ல் 47,70,503 பேர் சேர்ந்திருப்பதாகவும் அவர் களின் மொத்த ஓய்வூதிய நிதி ரூ.29852 கோடி என்றும் கூறியுள்ளார்.17.8.2012ல் ரூ.17,623 கோடி இந்த நிதியாக இருந்தது என்றும் அதில் மத்திய அரசு ஊழியர்களின் பங்கு ரூ.11,315 கோடி என் றும் மாநில அரசு ஊழியர்களின் பங்கு ரூ.5500 கோடி என்றும் மற்ற தனியார் கம்பெனிகளிடம் இருந்து வந்தது வெறும் ரூ. 801 கோடி என்றும் தெரிகிறது.
வெளியே போராட்டம் தீவிர மானால் மசோதா இந்த 15வது மக்களவை யிலும் நிறைவேறாது. மத்திய அரசு ஊழியர்கள் வாக்கெடுப்பு வரும் தினத்தில் 2 மணி நேர வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். ரயில்வேயும் சேர்ந்தால் பலன் அதிகம் இருக்கும்.
அனைவருக்கும் 1.1.2004 முதல் புதிய பென்சன் திட்டம் அமலானால் தமிழகத்தில் மட்டும் 1.4.2003 முதலே அமல்படுத்தப்பட்டு விட்டது. அமல்படுத்தியது அண்ணாதிமுக அரசு. அதன் பின் வந்த திமுக அது நல்லது என்று கண்டது. அதைத்தொடர்ந்தது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கடைசி தினத்தில் ஜெயலலிதா அவர்கள் புதிய பென்சன் திட்டத்தை வாபஸ் வாங்குவேன் என்று அறிவித்தார். அதற்கேற்றாற்போல மசோதா 2011 மார்ச்சில் அறிமுகப்படுத்தப் பட்டபோது இடதுசாரிகளோடு சேர்ந்து அதிமுக எதிர்த்து வாக்களித்தது.
ஆனால், தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியப் பணம் அறக்கட்டளை வங்கிக்கு இப்போது அனுப்பப்பட்டு எல்லா ஊழியர்களிடமும் நிரந்தர ஓய்வுக் கணக்கு எண்  வழங்க கையெழுத்து வாங்கப்படுகிறது
அருமை தோழர்களே ! மதுரை நேதாஜி சிலை அருகில் 02-09-13 மாலை 6 மணிக்கு நகர தொழிற் சங்கங்களின் சார்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம் .
...என்றும் தோழமையுடன் ...எஸ். சூரியன் ----மாவட்ட செயலர் 

No comments: