Wednesday, 21 August 2013

நமது நீதி கேட்கும் போராட்டம் வெல்லட்டும் . . . . .

அருமைத்தோழர்களே! கோரிக்கை வெல்ல போராடுவோம்

வெகு நாட்களாக தேங்கிக் கிடக்கும் நமது நியாமான கோரிக்கைகள் பல முறை நமது மத்திய சங்கத்தால் விவாதிக்கப்பட்டு ,நிர்வாகத்தால் ஏற்றுக்கொண்ட பிரச்சனைகள் கூட தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கும் போக்கு தொடர்வதால் வேறு வழியின்றி நமது மத்திய சங்கம் முறைப்படி செயற்குழுவை கூட்டி முடிவை நிர்வாகத்திற்கு கொடுத்தது  .அதன்பின் தான் 3 கட்ட போராட்டத்தை அறிவித்து இப்போது 2வது கட்ட போராட்டமாக 3நாட்கள் தொடர் தர்ணாவை 21.08.2013 முதல் 23.08.2013வரை நடத்துகிறோம் .இதற்கு பின்னும்  நிர்வாகம் பிரச்சனைகள் தீர்விற்கு முன்வரவில்லை எனில் அடுத்த கட்டமாக வேலைநிறுத்தம் நடத்துவதை தவிர நமக்கு வேறு வழியில்லை. 
ஆகவே ,தோழர்களே ! நமது நியாமான கோரிக்கைகள் வென்றிட சக்தியாக போராடுவோம் !. வென்றிடுவோம் !.

போராட்டவாழ்த்துக்களுடன் ,
- - எஸ்.சூரியன்......மாவட்டசெயலர்    


No comments: