ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு UNITED FORUM போராட்டம் . . .
அருமைத் தோழர்களே வணக்கம் . . .நமது மத்திய சங்கத்தின் கொல்கத்தா செயற்குழுவின் அடிப்படையில் கோரிக்கைகள் தீர்வுக்காக எடுக்கப்பட்ட போராட்ட முடிவு நமது UNITED FORUM போராட்டமாக எதிர் வரும் 21, 22 & 23 ஆகிய தேதிகளில் தர்ணா நடைபெற உள்ளது. தர்ணாவை வெற்றிகரமாக்கிட நமது மதுரை SSA யில் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம்.
நாள் : 21,22 & 23.08.2013 - இடம் : லெவல்4 வளாகம் - மதுரை-2.
கோரிக்கைகள் :- 01.01.2007 ஊதிய மாற்றத்திற்கு பின் உருவாகியுள்ள ஊதிய தேக்க நிலை. (inculding staganation in RM, Gr.D) மாற்றப்பட வேண்டும்.
- 01.01.2007க்கு பின் பணியில் அமர்ந்தவர்களுக்கு ஊதியக் குறைப்பு போக்கப்பட வேண்டும்.
- கேடர்களின் பெயர்கள் மாற்றப்பட வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட சங்கத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தம்/ஆலோசனைகளின் அடிப்படையில் NEPPயை மேம்படுத்து.
- Non-Executive ஊழியர்களுக்கு E1 ஊதிய விகிதம் உடனே வழங்கு.
- கருணை அடிப்படையிலான பணி நியமனம் செய்.
- விடுபட்ட காசுவல் மற்றும் TSMகளை நிரந்தரப்படுத்து.
- முதலாவது ஊதிய மாற்றத்தில் ஏற்பட்ட அனாமலிகளை தீர்த்து வை.
- போனஸ் வழங்கு. (PLI)
- LTC, LTCயில் விடுப்பை காசாக்குவது, Med. Allowance மீண்டும் வழங்கு.
- Non-Executive ஊழியர்களுக்கு அலவன்ஸ்களை மாற்றி அமை.
- TM, TTA, JAO, JTO ஆகிய இலாக்க தேர்வுகளுக்கு தகுதிகள் குறைக்கப்பட வேண்டும்.
- Sr.TOA/TM மற்றும் இதர கேடர்களின் ஊதியத்தை உயர்நிலைப்படுத்து.
- Telecom Factoryகளை புத்தாக்கம் செய்வதோடு Stores, Civil, Telecom Accounts, Driver பிரச்சினைகளை தீர்த்து வை.
- DOP&T உத்தரவுகளின்படி இலாக்கா பதவி உயர்வுகளில் SC/ST ஊழியர்களுக்கு மதிப்பெண்களை மேலும் தளர்த்து.
- SC/ST ஊழியர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்பு.
- NEPPல் SC/ST ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டை அமுல் படுத்து.
- DOT காலத்தில் பயிற்சி துவங்கப்பட்டு BSNLல் நியமனம் வழங்கப்பட்டவர்களுக்கும் DOT காலத்தில் நிரந்தரப்படுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டு BSNL ஆனா பின்பு பணிநியமனம் ஆனவர்களுக்கு ஜனாதிபத்திய உத்தரவு வழங்க வேண்டும்.
- BSNLல் உள்ள 4ம் பிரிவு ஊழியர்களின் IDA ஊதியத்திற்கு இணையாக TSM மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கும் வழங்கு.
- ஒப்பந்த ஊழியர்களுக்கு அவர்கள் எந்த பணியாற்றுகின்றனரோ அந்த கேடரின் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கு.
- ஒப்பந்த ஊழியர்களுக்கு EPF, ESI உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு நலச்சட்டங்களை அமுல் படுத்து.
- TMகளுக்கான தகுதியும், பயிற்சியும் பெற்றுள்ள தோழர்களை Personal Upgradation முறையில் TMகளாக பதவி உயர்வு செய்.
- JTOவாக Officiate செய்யும் TTAகளுக்கு Personal Upgradation முறையில் JTOவாக பதவி உயர்வு வழங்கிடு.
- 1.10.2000க்கு பின் அடுத்தாண்டு ஊதிய உயர்வு கிடைக்கும் ஊழியர்களுக்கு பதவி உயர்வின்போது ஊதிய நிர்ணயம் செய்யும் வாய்ப்பை வழங்கிடு.
- காலியிடங்களை நிரப்பும் விதமாக சமீபத்தில் நடைபெற்ற JTO/JAO தேர்வில் தோல்வியுற்ற ஊழியர்களுக்கு தகுதிக்கான மதிப்பெண்களை தளர்த்து.
- புதியதாக ஊழியர்களை பணிக்கு எடுக்கப்பட வேண்டும்.
- அனைத்து ஊழியர்களுக்கும் 5 நாட்கள்/40 மணி நேர பணி அமுல்படுத்து.
- BSNLல் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன் வழங்கு.
- Management Trainee தேர்வில் பங்குபெறும் வாய்ப்பை C & Dக்கும் வழங்கு.
என்றும் தோழமையுடன் . . எஸ். சூரியன் . . மாவட்ட செயலர் . .
No comments:
Post a Comment