Thursday 29 August 2013

ஒப்பந்த ஊழியர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் 06-09-13



அருமை தோழர்களே ! வணக்கம் . . . .

பெரும்பாலான மாநிலங்களில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கார்ப்பரேட் அலுவலக உத்தரவுப்படி வழங்கப்படுவது இல்லை மேலும் அவர்களது ஊதியங்கள்,பணியாளர் வருங்கால வைப்பு நிதி & ஈஎஸ்ஐ பங்களிப்புகளின் ஒரு கணிசமான பகுதி ஒப்பந்தக்காரர்கள் மற்றும் நேர்மையற்ற அதிகாரிகள்  மூலம் சூறையாடப்படுகின்றன. .

தொழிலாளர்கள் தங்கள் ஊதியங்கள், பணியாளர் வருங்கால வைப்பு நிதி & ஈஎஸ்ஐ சலுகைகள் கோரி, போராட்டத்தில் செல்லும் போது, அவர்கள் இரக்கமற்று வேலை நீக்கம் செய்யபடுவது பல மாநிலங்களில் நடக்கிறது. கார்ப்பரேட் அலுவலகத்தின் கவனத்திற்கு இதை கொண்டு சென்ற நமது  BSNLEU சங்கம்  எடுத்த அனைத்து முயற்சிகளும், செவிடன் காதில் ஊதிய சங்காய் உள்ளது. 

 26.08.2013 அன்று டெல்லியில்  நடைபெற்ற நமது  BSNLEU, மத்திய செயலக கூட்டம் பல்வேறு மாநிலங்களில் வேலை நீக்கம் செய்யபட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு  எடுக்க கோரி, 06.09.2013 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளது , BSNLEU மாநில மற்றும் மாவட்ட சங்கங்கள் குறைந்தபட்ச ஊதியம் வழங்க   கோரியும்   கார்ப்பரேட் அலுவலக உத்தரவுகளை செயல்படுத்துவதற்கும்,  வேலை நீக்கம் செய்யபட்ட தொழிலாளர்களை மீண்டும் எடுக்ககோரியும்   சக்தி மிகுந்த ஆர்ப்பாட்டம் 06-09-2013 அன்று நாடு முழுவதும்   நடத்த 26.08.2013 அன்று நடைபெற்ற நமது  BSNLEU, மத்திய செயலக கூட்டம் முடிவு செய்துள்ளது.

மத்திய சங்க முடிவுகளை சிரமேற் கொண்டு செயல் படுத்துவோம் .

தோழமை வாழ்த்துக்களுடன் . . .எஸ்.சூரியன் D.S - BSNLEU  .

No comments: