Sunday, 11 August 2013

டெல்லயில் 03.08.2013 அன்று நடைபெற்ற கருத்தரங்கம் ...

அருமைத் தோழர்களே!  அனைவருக்கும்  வணக்கம் ...

03.08.2013 அன்று டெல்லி யில் நடந்த" REVIVAL OF BSNL" கருத்தரங்கில்  தோழர். அனிஸ் மித்ரா DY.GS

 

டெல்லி மாவிலங்கர் ஹாலில் ஆகஸ்ட் 3ம்  தேதி ,BSNLலில்  உள்ள அனைத்து ஊழியர் சங்கங்கள் சார்பாக, மற்றும் அதிகாரி சங்கங்கள் சார்பாக 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. நமது  மாவட்டத்திலிருந்து தோழர் .எஸ். ஜான்போர்சியா  கலந்து கொண்டார் ."BSNL REVIVAL" க்காக நடைபெற்ற கருத்தரங்கில் ....

FORUM தலைவர் .தோழர் C .சிங் தலைமை தாங்கினார். FORUM கன்வினர் தோழர். VAN. நம்பூதிரி அனைவரயும் வரவேற்று பேசினார் .

மத்திய சங்கங்கள் சார்பாக,தோழர். தேஷ்தேவ்ராய்-CITU, தோழர்.குருதாஸ் குப்தா-AITUC, தோழர். பைச்னாத் சிங்-BMS, தோழர் .DR .உதித்ராய்-SC/ST, தோழர் தாமஸ் ஜான்-INTUC ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .

நமது BSNLலில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள்  தோழர் .அனிமேஷ் மித்ரா-BSNLEU, தோழர். பிரகலத்ராய் - AIBSLEA, தோழர். சுரேஷ்குமார்-BSNLMS,தோழர் R .வெங்கட்ராமன்-TEPU, தோழர். சுப்ரமணியம்-BTEU, தோழர். ஜெயபிரகாஷ்-NUBSNLW, தோழர் .மதிவாணன்-NFTE, தோழர். R.D.ஷர்மா-BSNLOA, தோழர். N.D.ராம்-SEWA ஆகியோர் உரையாற்றினர்

.இறுதியாக, டெல்லி கருத்தரங்கம்போல், மாநில, மாவட்ட தலைநகரங்களிலும் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்திய நாடு முழுவதும் BSNLலில் 2.5 லட்சம் ஊழியர்களை பிரதிநிதித்துவப் படுத்தும்  FORUM OF BSNL UNIONS AND ASSOCIATION கூட்டமைப்பு  சார்பாக BSNL புத்தாக்கம் மற்றும் சந்தாதாரர்களுக்கு சிறந்த சேவை தருவது என்ற முடிவை, நம்பிக்கையை கருத்தரங்கம் மனதில் விதைத்துள்ளது .

கருத்தரங்கம், BSNL நிறுவனத்திற்கும், மத்திய அரசிற்கும் 17 அம்ச கோரிக்கையை வடித்தெடுத்து உள்ளது .
  1. BSNLக்கு உரிமக்கட்டணம், ADC கட்டணம், USO FUND மத்திய அரசு வழங்கவேண்டும் .
  2. BSNLக்கு  கூடுதல் ஸ்பெக்ட்ரம் இலவசமாக வழங்கவேண்டும்.
  3. BWA மற்றும் 3G  ஸ்பெக்ட்ரம் கட்டணமாக BSNL நிறுவனத்திடமிருந்து வசூல் செய்த 18500 கோடி பணத்தை BSNLக்கு திரும்ப தரவேண்டும் .
  4. மத்திய, மாநில, பொதுத்துறை அலுவலகங்களில் BSNL சேவையை மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும் .  
  5. BSNLக்கு  கொடுக்கப்பட்டதாக கருதப்படும் 7500 கோடிக்கு 14.5% வட்டி விகிதப்படி 12000 கோடி பணத்தை BSNLக்கு திரும்ப தரவேண்டும் .
  6. BSNLலில் உள்ள அனைத்து சொத்துக்களையும் உடனடியாக BSNLபெயருக்கு மாற்றப்படவேண்டும் .
  7. மொபைல், பைபர் கேபிள், ப்ரண்ட்பாண்டு, மோடம், DROPWIRE, OFC CABLE ,மற்றும் தொலைபேசி கருவிகள் உறுதியானவையாக வேண்டும் 
  8. DOTக்கு நமது BSNL  செலுத்தும் பென்ஷன் பங்களிப்பு உண்மையில் வாங்கும் ஊதியத்தின் அடிப்படையில் கொடுத்து தற்போது BSNLக்கு  ஏற்ப்பட்டுள்ள நஷ்ட்டத்தை போக்க வேண்டும் .
  9. USO நிதிவசூலிலிருந்து BSNLக்கு  விதி விலக்கு  அளிக்கவேண்டும் .
  10. DEPUTED அதிகாரிகள்  இல்லாமல் BSNLலில் விருப்பம் தந்துள்ள அதிகாரிகளை BSNL  நிர்வாகிகளாக செயல்படுத்த வேண்டும் .
  11. டவர்  மற்றும் இதர தொலைபேசி கருவிகளை நமது டெலிகாம் பாக்டரி யில் இருந்து  மட்டும் வழங்கவேண்டும் .
  12. சேவை விரிவாக்கத்திற்கு, BSNL மேம்பாட்டிற்கு, சங்கம் + நிர்வாகம் இணைந்து செயல்படும் WORKS கமிட்டி செயல்பாடு தேவை .
  13. VRS  திட்டத்தை மற்றவையில் இருந்து  பாடம் கற்றுக் கொண்டு VRS என்பதை BSNLலில்  தவிர்க்கவேண்டும் .
  14. BSNL லில்  பங்கு விற்பனை / தனியார்மயம்  கூடாது .
  15. தொலை தொடர்பு துறையில் அந்நிய நேரடி மூலதனம் 100 சதம் என்பதை கைவிடவேண்டும் .
  16.  தொலை தொடர்பு துறையில் மட்டும்  இருந்து வந்த TACயை  BSNLலில் ரத்து செய்தாகவேண்டும் .
  17. மார்க்கெட்டிங்  மற்றும் வளர்ச்சி  நடவடிக்கைகளில் உற்சாகமான , கடப்பாடுடன் ஊழியர்கள் + அதிகாரிகளும்  பங்கேற்க்கவேண்டும்.
என்றும்  தோழமையுடன்...  
எஸ்.சூரியன் - மாவட்ட செயலர் -


No comments: