Monday, 12 August 2013

அமெரிக்காவின் மணிக்கூலிகள் ....

 நாள் தோறும்  அமெரிக்காவில் அதிகரித்துவரும் தினக்கூலிகள் ...



அமெரிக்காவில் தினக்கூலிகளின் போராட்டம் 

மணிக்கூலி,அமெரிக்கா”
அமெரிக்கப் பேரரசர் பாரக் ஒபாமா.  சமீபத்தில் பிரபலஅமேசான்நிறுவனத்தின் விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ஒபாமா, ‘கவுரவமான ஊதியத்துடன் கூடிய நடுத்தர வர்க்கவேலைகளை லட்சக்கணக்கில் உருவாக்குவதே தனது லட்சியம் என்றும் கூறிக் கொண்டார். ஒபாமாவின் இந்தப் பேச்சினை மறுநாள் பத்திரிகைகளில் படித்த அமெரிக்கர்கள் வாய்விட்டு சிரித்து தங்களது வேதனைகளை மறக்க முயற்சித்தனர்.

நம்மூரில் தினக்கூலிகள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் லட்சக்கணக்கில்மணிக்கூலிகளைஉருவாக்கிக் கொண்டிருக்கிறது முதலாளித்துவ அமெரிக்கா. கடந்த 4 மாதக் காலத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கிவிட்டதாக ஒபாமா நிர்வாகம் கணக்கு காட்டியிருக்கிறது.. அமெரிக்காவின் மொத்த தொழிலாளர் சக்தியில் 12 சதவீதம் பேர் - அதாவது ஒரு கோடியே 70 லட்சம் பேர் முற்றிலும் தற்காலிக வேலையில் இருப்பவர்கள்; எந்த நேரத்திலும் இவர்கள் வேலை பறிக்கப்பட்டு வீதிக்கு துரத்தப்படலாம்.

அமெரிக்காவில் மட்டுமல்ல, இங்கிலாந்து உள்பட ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலைமை. பிரிட்டனில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வாரம் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் கூட வேலைவாய்ப்பு பெறாதவர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பிரிட்டன் முதலாளித்துவ பத்திரிகைகள், ‘பூஜ்ய நேர வேலையாட்கள்என்று பெயர் கொடுத்திருக்கிறது, அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச கூலியோ, தொழிற்சங்க உரிமையோ, கூட்டுப் பேர உரிமையோ எதுவுமே இந்த வார்த்தையின் வரம்பிற்குள் வராது.நெருக்கடியின் அடிஆழத்திற்குள் தலைக்குப்புற வீழ்ந்து கொண்டிருக்கும் முதலாளித்துவம் நவீன உலகிற்கு அளித்துள்ள கொடையே இந்தமணிக் கூலிகள்.

உலகின் நீரோட்டத்தில் நாமும் இணைந்து கொள்ள வேண்டுமென்று இந்திய தேசத்தின் மன்மோகன் - சிதம்பரம் - மான்டேக்சிங் வகையறாக்கள் இடைவிடாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நீரோட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை இணைக்கும் முயற்சியில் வெற்றியும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.அந்த வெற்றியின் விளைவே, இந்தியாவின் வேலையின்மை மேலும் ஒரு சதவீதம் நடப்பாண்டில் அதிகரித்திருக்கிறது. முதலாளிகளின் அமைப்பான அசோசம் மேற்கொண்ட சர்வேயில் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
_ நன்றி தீக்கதிர் ....

No comments: