Wednesday 7 August 2013

7.8.2013 - பொது மேலாளருடன் பேட்டி

அருமை தோழர்களே ! வணக்கம் !!

நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக பொது மேலாளருடன் 7.8.2013 அன்று பேட்டி நடைபெற்றது.  பேட்டியின் போது  நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழர்கள் சூரியன், ரவிச்சந்திரன், ராமலிங்கம் ஆகியோரும், நிர்வாகத்தின் சார்பாக GM, DGM (F & A), AGM (HR) ஆகியோரும்  கலந்து கொண்டனர்.  

விவாத குறிப்பு:
  • பழுது அடைந்துள்ள லெவல் - IV  வளாக LIFT  உடனடியாக இயக்கப்பட வேண்டுமென நாம்  கோரினோம். GM  அவர்கள் உடனடியாக EE (எலெக்ட்ரிகல்ஸ்) அவர்களிடம் லிப்ட் பணியை விரைவு படுத்த வலியுறுத்தினார்கள். அதன் அடிப்படை யில் இன்னும், 10 நாட்களுக்குள் LIFT பழுது பார்க்கப்பட்டு இயக்கப்படும். 
  • UDAAN PROJECT - ல்  பணி புரிபவர்களுக்கு நிலுவையில் உள்ள ALLOWANCE பட்டுவாடா செய்யப்பட வேண்டுமென கோரினோம். GM அவர்கள் DGM  (F & A) அவர்களுடன் பேசி நிலுவையாக உள்ள அலவன்சை உடனடியாக பட்டுவாடா செய்வதற்கு வலியுறுத்தினார். 
  • இப்பொழுது திருமங்கலம் துணைகோ ட்டத்தில் பணி செய்யும்  தோழர் சிவகுமார் , TTA, திருச்சி மாவட்டத்தில் பணியாற்றிய காலத்தில் 6 மாதகால  EPF பிடித்தம் GPF கணக்கில் தவறுதலாக சேர்க்கப் பட்டுள்ளது, அதனை அவரது EPF கணக்கில் சேர்க்கப்பட வேண்டுமென கோரினோம்.  GM அவர்கள் திருச்சி DGM( FINANCE)  அவர்களுடன் பேசி ஆனநடவடிக்கை எடுக்க  வேண்டுமென வலியுறுத்தினார். 
  • கே.கே.நகர் தொலைபேசியகத்திற்க்கான  குடி தண்ணீர், மற்றும் TELECOM சென்டருக்கான PRINTER பிரச்சனை தீர்வுக்காக கோரினோம்.  உடனடி தீர்விற்கு GM வழி வகுத்தார்.
  • மதுரை டவுன் டெலிகாம் சென்டரில் பணியாற்றுபவர்களின் விருப்ப கடிதத்தை கணக்கில் கொண்டு மாற்றல் உத்தரவிட வேண்டுமென்ற நமது கோரிக்கையை GM அவர்கள் ஏற்று உத்தரவிட வேண்டுமாய் AGM (HR) அவர்களுக்கு வழிகாட்டினார்.
  • டெலிகாம் மெக்கானிக் புதிய நியமனம் மற்றும்  தேர்வு ஆகியவை நமது மதுரை மாவட்டத்தில் நடத்த வேண்டுமென்ற நமது கோரிக்கை குறித்து, நிர்வாகத்தின் பல்வேறு முயற்சிகள் பற்றி விளக்கமாக GM அவர்கள் நம்மிடம் எடுத்தியம்பினார்கள் . நமது மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய TM பதவிகள் நிரப்புவதற்கு CGM ஒப்புதல் பெறப்பட்டு, பயிற்சி முடித்து உள்ளவர்களையும், புதிதாக தேர்வு எழுத இருப்பவர்களையும் கொண்டு அமலாக்குவதற்கான நடவடிக்கையை கூடிய விரைவில் எடுக்க GM அவர்கள் இசைந்துள்ளார்.
  • பீபிகுளம் தொலைபேசியகத்திற்கு தனியாக ஒரு ENGINE ALTERNATOR தேவை என்ற நமது நெடு நாளைய கோரிக்கையை தீர்த்து வைத்த பொது மேலாளருக்கு மாவட்ட சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேற்கண்ட பிரச்சனைகள்  தவிர, ஒரு சில மாற்றல்கள்,மற்றும் தற்காலிக மாற்றல்கள் குறித்து ஊழியர்களின் விருப்பங்களை அமுலாக்க விவாதித்துள்ளோம்.  நமது பிரச்சனைகளின் தீர்விற்கு வழி வகுத்த நிர்வாகத்திற்கு நமது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.

வாழ்த்துக்களுடன்,
என்றும் தோழமையுடன்,
S. சூரியன், மாவட்ட செயலர்.


No comments: