Saturday 10 August 2013

10 % பங்குகளை விற்க முடிவு

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 10%  பங்குகளை விற்க முடிவு



மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் IOC-ன் 10 சதவிகிதப் பங்குகளை  தனியாருக்கு விற்றுவிட  மத்திய அரசு முடிவு செய்துள்ளது . பொருளாதார  விவகாரங்கள்  தொடர்பாக பிரதமர்  தலைமையில் நடைபெற்ற  மத்திய  அமைச்சரவை கூட்டத்தில்  இந்த முடிவு  எடுக்கப்பட்டதாக  மத்திய  நிதி அமைச்சகம்  வெளிட்டுள்ள  அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது . 

தற்போதைய  பங்கு வர்த்தக  நிலவரப்படி  இந்தியன் ஆயில்
நிறுவனத்தின் 10 சதவிகித  பங்குகளை  விற்பதின் மூலம்  3 ஆயிரத்து 700 கோடி  ரூபாயை திரட்ட முடியும்  என  மத்திய அரசு  கருதுகிறது . தற்போதைய  முடிவின் படி 10 சதவிகிதப் பங்குகளை தனியாருக்கு  விற்று விட்டால்  இந்தியன் ஆயில் நிறுவனத்தில்  மத்திய அரசின் பங்கு 68.92 சதவிகிதமாக குறையும்  

இந்த முடிவை  எதிர்த்து  நாடு தழுவிய  போராட்டத்திற்கு ஏற்கெனவே  CITU உள்ளிட்ட  மத்திய  தொழிற்சங்கங்கள் அழைப்பு  விடுத்துள்ளன

மத்திய அரசு  இப்படி  பொதுத்துறை நிறுவனங்களை  சீரழிக்கும் முயற்சியை  தொடர்ந்து  கடைபிடித்து வருவதை  நம்மை போன்ற தொழிலாளிவர்க்கம் எதிர்க்கவேண்டியது முழுமுதற் கடமையாகும்


என்றும் தோழமையுடன் - எஸ் . சூரியன்-   மாவட்டசெயலர் 

No comments: