அருமைத் தோழர்களே! அனைவருக்கு வணக்கம் . . .
நமது அகில இந்திய சங்கத்தின் கொல்கட்டா மத்திய செயற்குழுவில் வடித்தெடுத்த கோரிக்கைகளும், போராட்டத் திட்டமும் நமது UNITED FORUM அறைகூவலாக விடுக்கப்பட்டு 3 நாள் தர்ணாவை சக்தியாக நமது கூட்டணி சங்கங்களுடன் இணைந்து நடத்தியுள்ளோம்.
- முதல் நாள் தர்ணா TEPU மாவட்டத் தலைவர் தோழர். A.K. குணசேகரன் தலைமையில் நடை பெற்றது. - பங்கேற்பு 63 பேர்.
- 2ம் நாள் தர்ணா SEWA மாவட்டச் செயலர் தோழர் சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. - பங்கேற்பு 90 பேர்.
- 3ம் நாள் தர்ணா BSNLEU மாவட்டச் செயலர் தோழர் எஸ். சூரியன் தலைமையில் நடைபெற்றது. - பங்கேற்பு 186 பேர்.
தர்ணா துளிகள் . . .
- கிளைச் செயலர்களின் கோரிக்கை விளக்க பட்டறையாக அமைந்தது.
- 3 நாட்களும் AIBSNLEA தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
- 3 நாட்களும் ஒப்பந்த ஊழியர்கள் உதவியும், சிறிய பங்கேற்பும் இருந்தது.
- 36 கிளைகளில், ஓரிரு கிளைகளைத் தவிர பங்கேற்பு அமைந்தது.
- அடுத்த கட்டமாக நடைபெறவுள்ள அடையாள வேலை நிறுத்தத்தை இன்னும் எழுச்சியுடன் நடத்துவது என்ற புரிதலோடு 3 நாட்கள் தர்ணாவை நிறைவு செய்தோம்.
AIBSNLEA- தோழர் V.K. பரமசிவம், TEPU- தோழர் V. சூரப்பன் ஆகிய அகில இந்திய நிர்வாகிகளும், தோழர்கள் எஸ். ஜான் போர்ஜியா, சி. செல்வின் சத்யராஜ் BSNLEU மாநில சங்க நிர்வாகிகளும் உடனிருந்து வாழ்த்தி வழி நடத்தினார்கள்.
3 நாட்கள் தர்ணா சிறக்க உதவிய அனைவருக்கும் UNITED FORUM சார்பாகவும், BSNLEU சார்பாகவும் மனமார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் உரித்தாக்குகிறோம்.
தோழர் V.K. பரமசிவம் AIBSNLEA - CHQ ADVISOR வாழ்த்துரை |
என்றும் தோழமையுடன் . . எஸ். சூரியன் . . மாவட்ட செயலர்
No comments:
Post a Comment